லயன் டேட்ஸ் சிரப்பை பாலுடன் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.!

Advertisement

Lion Dates Syrup With Milk Benefits in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Lion Dates Syrup- ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நீங்கள் லயன் டேட்ஸ் சிரப்பை பாலுடன்  சேர்த்து குடித்து வந்தால் அதனின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பேரீட்சைப்பழம் உடலிற்கு சத்தான ஒன்றாக இருக்கிறது. இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலும் பேரீட்சைப்பழத்தை விரும்ப மாட்டார்கள். இனிப்பாக இருப்பதால் நேரடியாக எடுத்து கொள்ளாமல் பேரீச்சைப்பழத்தால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் பலரும் லயன் டேட்ஸ் சிரப் குடிப்பார்கள். அப்படியே குடிப்பதை விட பாலில் கலந்து குடிப்பார்கள். இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

லயன் டேட்ஸ் சிரப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில அத்தியாவசிய தாதுக்களுடன் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நல்ல சர்க்கரையின் சிறந்த மூலமாகும், அதே நேரத்தில் பால் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பின் சிறந்த மூலமாக இருக்கிறது.

கருப்பு பேரீட்சைப்பழம் சாப்பிடுவதாக இருந்தால் இது தெரியாம சாப்பிடாதீங்க..

லயன் டேட்ஸ் சிரப் பயன்கள் | Lion Dates Syrup Benefits in Tamil Uses:

லயன் டேட்ஸ் சிரப் பயன்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

பேரீச்சைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இதை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது:

கொலஸ்ட்ரால் குறைய

பேரீட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இது இதய பாதிப்பு வராமல் தடுக்கிறது.

மூளையின் செயல்பாடு அதிகரிக்க: 

மூளையின் செயல்பாடு அதிகரிக்க

 

பேரீட்சைப்பழத்தில் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த சத்தானது நரம்பு மண்டலத்தை தூண்டி மூளையின் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதை தினமும் சாப்பிட்டு வருவதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நடுக்கம் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதற்கும் லயன் டேட்ஸ் சிரப் உதவுகிறது.

இரத்த சோகையை சரி செய்ய:

இரத்த சோகை

பேரீட்சைப்பழத்தில் இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்திவாசிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை பாலுடன் சேரும் போது இரத்த சோகையை சரி செய்கிறது.

செம்பருத்தி பூ டீ குடிப்பதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன..?

எடை அதிகரிக்க உதவுகிறது:

உடல் எடை அதிகரிக்க

லயன் டேட்ஸ் சிரப் மற்றும் பால் இரண்டுமே எடை அதிகரிப்பதற்கு உதவுகிறது. மேலும் இவற்றில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இரவு உணவாக எடுத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்க செய்யும். அதுவே நீங்கள் காலை மற்றும் மதிய நேரத்தில் எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க செய்யும்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது:

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது

பாலில் உள்ள கால்சியம் மற்றும் பேரீச்சைப்பழத்தில் உள்ள சிங்க் சத்து இரண்டும் சேரும் போது எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. மேலும் எலும்பு சம்மந்தப்பட்ட ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

செரிமானத்திற்கு நல்லது:

செரிமானத்திற்கு நல்லது

பேரீச்சைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துருப்பதால் செரிமான பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை வராமலும் பாதுகாத்து கொள்கிறது.

சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது:

சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது

பேரீச்சைப்பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் இவை இரண்டும் சேரும் போது வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை அழகாக வைத்து கொள்ள உதவுகிறது.

மூட்டு வலி நீங்க:

பாலில் கால்சியம் சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதனுடன் பேரிச்சைப்பழம் பழம் சேர்க்கப்படும்போது இதில் இருமடங்கு சத்துக்கள் சேர்க்கிறது. எனவே, பாலில் லயன் டேட்ஸ் சிரப் சேர்த்து குடிக்கும்போது மூட்டு வலி எளிதில் குணமாகிறது.

வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement