Low Calorie Fruits in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அதாவது இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவா அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது உடல் எடை அதிகரிப்பு தான். அதனால் அதனை குறைப்பதற்காக கலோரிகள் குறைவான உணவுகளை உட்கொள்ளவும். அதாவது கலோரி என்பது ஒரு நாளைக்கு நமக்கு தேவையான ஆற்றலை கொடுப்பது. இந்த ஆற்றல் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கிறது. ஆற்றல் (கொழுப்பு) அதிகமாகும் போது உடல் எடை அதிகரிக்கிறது, ஆற்றல் குறைவாகும் பொழுது உடல் எடை குறைந்து காணப்படும். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்று கலோரிகள் குறைவாக உள்ள பழங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உடல் எடை குறைய கலோரி குறைந்த உணவுகளின் பட்டியல் இதோ
மனிதனனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு கலோரி தேவை:
அதாவது ஆண்களுக்கு சராசரியாக 2,500 கலோரியும், பெண்களுக்கு 2,000 கலோரி ஒரு நாளைக்கு தேவை. அதேபோல் அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு கலோரிகள் தேவைப்படும்.
இப்பொழுது கலோரிகள் குறைவாக உள்ள பழங்களை பற்றி பார்க்கலாம்.
திராட்சைப்பழம்:
பொதுவாக திராட்சைபழம் குறைவான கலோரியை கொண்டுள்ளது. அதாவது 123 கிராம் திராட்சையில் வெறும் 37 கலோரிகளே உள்ளது. மேலும் இது உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி-யின் தினசரி மதிப்பில் 51% வழங்குகிறது.
அதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா
ஆப்பிள்:
அப்பிளிலும் குறைவான கலோரிகளே உள்ளது. அதேபோல் ஆப்பிளில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதாவது ஒரு பெரிய ஆப்பிள் பழத்தில் 116 கலோரிகள் மற்றும் 5.4 நார்ச்சத்தும் உள்ளது.
பெர்ரி:
பொதுவாக பெர்ரி வகையை சேர்ந்த பழங்கள் குறைந்த கலோரிகளையும் அதி ஊட்டசத்துக்களையும் கொண்டுள்ளது. அதாவது ஒரு கப் (123 கிராம்) ராஸ்பெர்ரியில் வெறும் 64 கலோரிகள் மட்டுமே உள்ளது.
ஆனால் அதுவே வைட்டமின் சி மற்றும் மாங்கனீசுக்கு 36% வழங்குகிறது. அதேபோல் ஒரு கப் (152 கிராம்) ஸ்ட்ராபெர்ரியில் 50 கலோரிகளுக்கும் கீழ் மற்றும் 3 கிராம் உணவு நார்ச்சத்தும் உள்ளது.
பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும் ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா
தர்பூசணி:
தர்பூசணி பழங்களில் கலோரிகள் குறைவு மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. அதாவது 1 கப் (150-170 கிராம்) தர்பூசணி பழத்தில் 46-61 கலோரிகளை வழங்குகிறது.
இது எடையை குறைக்க சிறந்ததாக இருக்கும்.
ஆரஞ்சு:
அனைத்து சிட்ரஸ் பழங்களைப் போலவே , ஆரஞ்சுகளிலும் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதாவது 140 கிராம் ஆரஞ்சில் 69 கலோரிகளை உள்ளது.
இதை தெரிஞ்சிக்காம மட்டும் கம்பினை சாப்பிடாவே சாப்பிடாதீங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |