மெக்னீசியம் உள்ள உணவு எது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

மெக்னீசியம் பயன்கள்

மக்னீசியம் மனித ஊட்டச்சத்தை பராமரிக்க தேவையான ஒரு கனிமமாகும். 300 உயிர்வேதியியல் எதிர்வினைகளுக்கு இந்த தாது தேவைப்படுகிறது. இது நரம்பு மற்றும் தசைகளின் இயல்பான செயல்பாட்டை சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, தேவையான புரதம் மற்றும் ஆற்றலை உற்பத்தி செய்கிறது, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. எனவே, கீழே பட்டியலிடப்பட்டுள்ள மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் பெறுங்கள்.

மெக்னீசியம் உள்ள உணவு  – Magnesium Rich Foods in TamilMagnesium Rich Foods

பூசணி விதை:

  • பூசணி விதையை 30 கிராம் அளவு உட்கொண்டால் அதன் மூலம் உங்களுக்கு 156 மில்லிகிராம் மெக்னீசியம் கிடைக்கும்.

சியா விதை:

  • சியா விதைகளை 30 கிராம் அளவு சாப்பிட்டால் அதன் மூலம் 111 மில்லிகிராம் மெக்னீசியம் கிடைக்கும்.

பாதாம் பருப்பு:

  • பாதாம் பருப்பு 30 கிராம் சாப்பிட்டால் 80 மில்லிகிராம் மெக்னீசியம் கிடைக்கிறது.

பசலைக்கீரை:

  • பசலைக்கீரையை ஒரு கப் அளவிற்கு பருகினால் 157 மில்லிகிராம் மெக்னீசியம் சத்து கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் வயிற்றில் டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா..?

முந்திரி பருப்பு:

  • முந்திரி பருப்பு 30 கிராம் சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு 74 மில்லிகிராம் மெக்னீசியம் நமக்கு கிடைக்கிறது.

வேர்க்கடலை:

  • 1/4 கப் வேர்க்கடலை சாப்பிட்டோம் என்றால் அதன் மூலம் 63 மில்லிகிராம் நமக்கு மெக்னீசியம் கிடைக்கும்.

ஓட்ஸ்:

  • 100 கிராம் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நமக்கு 29 மில்லிகிராம் மெக்னீசியம் கிடைக்கும். இது போக கோதுமை, அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை 100 கிராம் சாப்பிட்டாலே அதன் மூலம் 40 முதல் 45 மில்லிகிராம் மெக்னீசியம் நமக்கு கிடைக்கும்.

பால்:

  • தினமும் ஒரு கிளாஸ் பால் குடித்தோம் என்றால் அதன் மூலம் நமக்கு 24 மில்லிகிராம் மெக்னீசியம் கிடைக்கும்.

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட் மெக்னீசியம் நிறைந்த உணவுகளின் சுவையான ஆதாரங்களில் ஒன்றாகும். 28 கிராம் டார்க் சாக்லேட் 64 மில்லிகிராம் மெக்னீசியத்தை வழங்குகிறது,

அவகோடா பழம்:

  • ஒரு நடுத்தர அவகோடா பழத்தினை சாப்பிடுவதன் மூலம் 58 மில்லிகிராம் மெக்னீசியத்தை பெறமுடியும்.

வாழைப்பழங்கள்:

  • ஒரு வாழைப்பழம் 37 மில்லிகிராம் மெக்னீசியத்தை வழங்குகிறது.

கொய்யாப்பழம்:

  • மக்னீசியம் நிறைந்த பழங்களில் கொய்யாவும் ஒன்று. ஒரு கப் கொய்யாவில் 36 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நெஞ்சு எரிச்சலுக்கு இந்த வீட்டு வைத்தியத்தை செஞ்சா போதுமா..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement