மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை தீமைகள் இருக்கிறதா.!

Advertisement

மாம்பழம் நன்மை தீமைகள் பற்றி அறிவோம்

மாங்காய் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! மாங்காயை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுகின்றனர். மாங்காயில் ஊறுகாய், குழம்பு, வத்தல் போன்றவை செய்து சாப்பிட்ருப்போம். ஒவ்வொரு வகையான உணவுகளை சாப்பிட்டு அதனின் ருசியை மட்டும் தான் அறிந்திருப்போம். இந்த மாதிரி செய்யாமல் வேற மாதிரி செய்திருக்கலாம் என்று தான் சொல்வோம். ஆனால் இன்றைய பதிவில் மாங்காய் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

முதலில் இங்கு மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா 

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது:

புற்றுநோய் வராமல் தடுக்க

மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது. மாம்பழத்தில் உள்ள ஆக்சிஜினேற்றிகள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

இதய ஆரோக்கியம்

மாம்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இவை மாம்பழத்தின் மாங்கி பெரின் என்ற சேர்மம் உள்ளது. இந்த சேர்மமானது இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கு உதவுகிறது.

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை செரிமான பிரச்சனை வராமலும், மலசிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும் உதவுகிறது. மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்களும் மாம்பழத்தை சாப்பிடுவதன் மூலம் மலசிக்கல் பிரச்சனையை தீர்க்கலாம்.

ஊட்டச்சத்து:

மாம்பழத்தில் போலேட் சத்து நிறைந்துள்ளது. இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் குறைந்தபட்சமாக 400 எம்.சிஜி போலேட் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதனை சாப்பிடுவதன் மூலமாக குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏதும் ஏற்படாது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

மாம்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இந்த சத்தானது நமது உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கருப்பு பேரீட்சைப்பழம் சாப்பிடுவதாக இருந்தால் இது தெரியாம சாப்பிடாதீங்க..

மாம்பழம் பக்க விளைவுகள்:

சில வகை மாம்பழங்களை சாப்பிட்ட பிறகு சில நபர்களுக்கு தொண்டை வலி, ஒவ்வாமை பிரச்சனை, தும்மல் பிரச்சனை ஏற்படலாம்.

இன்னும் சில நபர்களுக்கு செரிமான பிரச்சனை, வயிற்று வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு போன்ற குடல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

மாம்பழம் யார் சாப்பிடக்கூடாது:

  • சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட கூடாது.
  • உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
  • வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கும் போது மாம்பழத்தை சாப்பிட கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement