மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான மருத்துவ அளவுகள்

Advertisement

Important Medical 

இன்றைய கால கட்டத்தில் உடலில் சின்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி, மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். மருத்துவரும் நம் உடலில் என்ன பிரச்சனை என்பதை பார்த்து விட்டு அதற்கான மருந்து, மாத்திரைகளை எழுதி தருவார்கள். ஆனால் சின்ன குழந்தைகள், மற்றும் வயதானவர்கள் இருக்கிற வீட்டில் BP apparatus, வெப்பநிலைமானி போன்றவை இருக்க வேண்டும். ஏனென்றால் வயதானவர்கள் இருந்தால் மயக்கம் வருகிறது என்று கூறுவார்கள், உடனே மருத்துவமனைக்கு பதற்றத்தோடு அழைத்து செல்வதை விட என்ன காரணத்தினால் மயக்கம் வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மருத்துவமனைக்கு சென்றால் ஆக்சிஜன் கம்மியா இருக்கு, சுகர் அதிகமாகயிருக்கு என்றெல்லாம் கூறுவார்கள். இதற்கான சரியான அளவுகள் தெரிந்தால் தான் கொட்டிட இருக்கிறதா, குறைவாக இருக்கிறதா என்பதை கணிக்க முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் மருத்துவ அளவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

முக்கியமான மருத்துவ அளவுகள்:

1. இரத்த அழுத்தம்: 120/80
2. துடிப்பு: 70 – 100
3. வெப்பநிலை: 36.8 – 37
4. சுவாசம்: 12-16
5. ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18) , பெண்கள் ( 11.50 – 16 )
6. கொலஸ்ட்ரால்: 130 – 200
7. பொட்டாசியம்: 3.50 – 5
8. சோடியம்: 135 – 145
9. ட்ரைகிளிசரைடுகள்: 220
10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்
11. சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 – 115
12. இரும்பு: 8-15 மி.கி
13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 – 11000
14. பிளேட்லெட்டுகள்: 150,000 – 400,000
15. இரத்த சிவப்பணுக்கள்: 4.50 – 6 மில்லியன்..
16. கால்சியம்: 8.6 – 10.3 mg/dL
17. வைட்டமின் D3: 20 – 50 ng/ml (ஒரு மில்லிலிட்டருக்கு நானோகிராம்கள்.)
18. வைட்டமின் B12: 200 – 900 pg/ml

தினமும் 16 வேர்க்கடலை சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம்..!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை:

ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்காக முயற்சிகளும் எடுக்க வேண்டும். அதில் முதலாவதாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இவற்றை யாரும் செய்வதே இல்லை.  அதனால் தான் உடலில் நீர் சத்து குறைகிறது, உடலும் சோர்வடைகிறது. அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சியுங்கள்.

உணவு முறையை சரியாக பின்பற்றுங்கள, ஏனென்றால் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடி ஓடி உழைக்கின்றோம். இதனால் நேரத்திற்கு உணவை சாப்பிடுவதில்லை. நீங்கள் தினமும் மூன்று வேலையும் சரியாக சாப்பிடுங்கள். கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். தினமும் முட்டை, வாரத்தில் இரண்டு நாட்கள் கீரை வகைகள், பயறு வகைகள், இறைச்சி போன்றவை கட்டாயம் சாப்பிடுங்கள்.

அடுத்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், தியானம் செய்யுங்கள். இவை செய்வதன் மூலம் நம் உடலும் சரி மனதும் சரி பலம் பெறும்.

மன அழுத்தம் ஏற்பட்டால் அதிலிருந்து வெளியே வந்துவிடுங்கள், அதையே நினைத்து கவலை அடையாதீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொன்றையும் ரசித்து வாழுங்கள்.

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன்.

உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement