மரவள்ளி கிழங்கு நன்மைகள் | Maravalli Kilangu Benefits in Tamil | மரவள்ளி கிழங்கு தீமைகள்
சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் அன்றாட நமக்கு பிடித்ததாகவும் மற்றும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவும் இருப்பது என்றால் அது உருளை கிழங்கு தான். சாப்பாடு வேண்டாம் என்று அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட உருளை கிழங்கு என்றவுடன் விரும்பி சாப்பிடும். இத்தகைய உருளை கிழங்கு ஆனது சிறியவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெரியவர்களும் ஆசைப்பட்டு சாப்பிடடக்கூடிய ஒன்று கிழங்காக மாறி விட்டது. ஆனால் உருளை கிழங்கு போலவே எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய கிழங்கு வகைகள் உள்ளது. அதில் ஒன்று இன்று மரவள்ளி கிழங்கின் சத்துக்கள் பற்றியும் மற்றும் நன்மைகள் பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
மரவள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் A
- வைட்டமின் B2
- வைட்டமின் C
- பாஸ்பரஸ்
- கால்சியம்
- கார்போஹைட்ரேட்
- புரதச்சத்து
- இரும்புச்சத்து
மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் மரவள்ளி கிழங்கில் அடங்கியுள்ளது.
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் |
மரவள்ளிக் கிழங்கின் பயன்கள்:
- மரவள்ளி கிழங்கில் வைட்டமின் C சத்து நிறைந்து உள்ளது. அதனால் இந்த கிழங்கினை நாம் சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ முடியும்.
- அதேபோல் இத்தகைய கிழங்கில் கால்சியம் சத்து இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் மூட்டுகள் மற்றும் எலும்புகளை பலம் பெறச் செய்கிறது.
- இத்தகைய கிழங்கில் வைட்டமின் B2 மற்றும் ரிபோஃப்ளோவின் என்ற சத்துக்கள் இருப்பதால் இது ஒற்றை தலைவலிக்கு சிறந்த ஒன்றாக காணப்படுகிறது.
- வைட்டமின் A சத்து இது இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதனால் கண் பார்வை மேம்படும். மேலும் தூரப்பார்வை, கிட்டப்பார்வை மற்றும் மங்கலான பார்வை என இவற்றையும் குணப்படுத்துகிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சத்துக்கள் மரவள்ளி கிழங்கில் அடங்கி இருப்பதால் இதனை சாப்பிடுவது நல்லது. ஆனால் சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
- மரவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதால் இதனை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமானம் மேம்படும். அதேபோல் வயிற்றுல் நன்மை அளிக்கக்கூடிய பாக்டீரியாவிற்கு நன்மையினையும் அளிக்கிறது.
- மேலும் மரவள்ளி கிழங்கில் இயற்கையாகவே வேதிப்பொருட்கள் நிறைந்து இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து நலமான வாழ்க்கையினை வாழ வழிவகுக்கிறது.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் |
மரவள்ளி கிழங்கு தீமைகள்:
- மரவள்ளி கிழங்கினை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்களுக்கு இருக்கும் பிரச்சனையினை அதிகம் படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- அதேபோல் மூளை தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மூளை பக்கவாதம் உள்ளவர்கள் இந்த கிழங்கினை சாப்பிடக்கூடாது.
- மரவள்ளி கிழங்கை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.
- அதிகமாக மரவள்ளி கிழங்கினை எடுத்துக்கொண்டால் உடல் அதிகரிக்கக்கூடும் வாய்ப்பும் உள்ளது.
ஆகவே எந்த பொருளை நாம் எடுத்துக்கொண்டாலும் அதனை சரியான அளவில் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது.
தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |