உடலின் மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்க உதவும் உணவுகள்
மன அழுத்தம் என்பது நம் வாழ்வின் இயல்பான ஒரு பகுதியாகிவிட்டது. நாம் அனைவரும் ஏதோ கட்டத்தில் அதை அனுபவிக்கிறோம். எப்படியிருந்தாலும், நாள்பட்ட மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கலாம். அதிர்ஷ்டவசமாக, மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க உதவும் ஏராளமான உணவுகள் உள்ளன. உங்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் மன அழுத்தத்தினை குறைக்கலாம். வாழ்க்கையின் சவால்களை நேர்மறையான அணுகுமுறையுடனும், புத்துணர்ச்சியுடனும் கையாளுவதற்கு இந்த மகிழ்ச்சி ஹார்மோன் உங்களுக்கு உதவிபுரியும்.
மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிப்பதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்..
உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்க சிறந்த உணவுகள் இங்கே:
improve mental health foods in tamil:
டார்க் சாக்லேட்:
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் முதன்மையானது டார்க் சாக்லேட். டார்க் சாக்லேட் சாப்பிடுவது மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும். டார்க் சாக்லேட் எண்டோர்பின்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. எண்டோர்பின்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றது, உற்சாகப்படுத்துகின்றது மற்றும் நேர்மறையான கருத்துக்களில் நமது மனதை ஈடுபாட செய்கிறது. டார்க் சாக்லேட் உங்கள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, இவை அனைத்தும் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துகின்றன.
ஸ்ட்ராபெரி:
ஸ்ட்ராபெர்ரிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் இந்த பெர்ரியில் உள்ள பிற வைட்டமின்கள் எண்டோர்பின்களை உருவாக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஸ்ட்ராபெர்ரிகளின் நன்மைகளில் ஒன்றாகும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றுகின்றது.
boost happy hormones in the body in tamil
திராட்சை:
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் உங்களின் உணவில் திராட்சையும் ஒரு பகுதியாக இருக்கட்டும். திராட்சையில் உள்ள வைட்டமின் சி மூலமாகும். திராட்சையிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவை மனநிலை மேம்படுத்துகிறது. திராட்சையிலுள்ள வைட்டமின்கள் எண்டோர்பின்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
மாம்பழத்தில் உள்ள கலோரி எவ்வளவு தெரியுமா ?
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பொட்டாசியம் நரம்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்த பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள் விரைவில் உடல் மற்றும் மன ஆற்றலை அதிகரிக்க உதவும்.
மீன்:
மீன்களில் ஒமேகா-3 என்னும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை மனநிலையை சீராக்க உதவுகிறது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கார்டிசோலைக் குறைக்க உதவும். கார்டிசோல் என்பது உடலால் தன்னிச்சையாக உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களில் ஒன்றாகும். நீங்கள் கவலையாக இருக்கும்போது, உங்கள் கார்டிசோலின் அளவு உயரும். மீன்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உங்கள் மனதை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள உதவும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள கலோரி எவ்வளவு என்று தெரியுமா….
உணவு வெறும் உடல் ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல மனம் ஆரோக்கியத்தையும் சார்ந்தது தான். அதனால்தான் உடல்நலக்குறைபாடு உள்ளவர்களுக்கு நிறைய சத்தான உணவுகள் வழங்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் மற்றும் ஆட்டிஸம் பாதித்த அல்லது ஹைப்பர்ஆக்ட்டிவ் குழந்தைகளுக்கு மருந்துகளைக் காட்டிலும் சில உணவு வகைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நாம் எதை உண்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம். நல்லதைச் சாப்பிட்டு நலமுடன் இருப்போம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |