மூக்கில் சதை வளர்வதை சரி செய்ய இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Advertisement

மூக்கில் சதை வளர்தல் குணமாக

இன்றைய காலத்தில்  மூக்கில் சதை வளர்வது என்பது  பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் வருவது வழக்கமாகி விட்டது. இன்றைய கால கட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு  மூக்கில் சதை வளர்வது வந்து கொண்டு தான் இருக்கிறது. இதன் அறிகுறியாக மூக்கில் நீர்வடிதல், மூக்கில் வாசனை இழப்பு, மூக்கில் அரிப்பு மற்றும் அடிக்கடி சளி பிடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இயற்கையான முறையில் மூக்கில் ஏற்பட்ட சதையை எளிமையான பொருட்கள் வைத்து சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு : 1

மூட்டு வலியை போக்கும் மூட்டு வலி தைலம் தயாரிக்கும் முறை..!

 mookil sathai valarchi home remedies in tamil ஸ்டெப் : 1 

முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். பிறகு அதில்  25 மி.லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாக்கவும். பின்பு அதனுடன் 5  தும்பை பூக்களை போட்டு கொதிக்க விடவும். அதன் பின் அடுப்பை நிறுத்தி விட்டு, 5 தும்பை பூவின் வேர்களை சேர்த்து 20 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு சாறுகள் இறங்கி விட்டால் தைலம் ரெடி.

ஸ்டெப்: 2

அடுத்ததாக அந்த தைலத்தை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டவும். இதனை ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்து கொள்ளலாம். இதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பயன்படுத்தும் முறை : 

தயாரித்து வைத்த தும்பைப் பூ தைலத்தை எடுத்து கொள்ளவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது, செய்து வைத்த  தும்பைப் பூ தைலத்தை 2 மூக்கிலும் ஒரு சொட்டு விட்டு வருவதால் மூக்கில் ஏற்பட்ட சதையை கரைத்து விடலாம்.

குறிப்பு : 2

முதலில் ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் சீரகம் மூன்று பொருட்களை எடுத்து கொள்ளவும். பிறகு இந்த மூன்று பொருட்களையும் இடித்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு காட்டன் துணியில் இடித்து வைத்த பொடியை சேர்த்து துணியை கட்டி வைத்து கொண்டு, அதனை மூக்கில் வைத்து வாசனையை இழுக்கும் போது மூக்கில் உள்ள சதைகள் வளர்வதை கரைத்து விடும்.

நால்பாமராதி தைலம் நன்மைகள் 

குறிப்பு : 4 

தேங்காய் எண்ணெயை சூடாக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு 20 கிராம் பச்சை கற்பூரத்தை இடித்து வைத்து அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொஞ்சம் நேரம் விட வேண்டும். பிறகு இதனை  வடிகட்டிக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வேப்பிலை, மஞ்சள், கற்பூரவல்லி இலை மற்றும்  துளசி இலை போன்ற இலைகளை போட்டு கொதிக்க விடவும். பிறகு செய்து வைத்த எண்ணெய் 10 டேபிள் ஸ்பூன் ஊற்றி விடவும்.

அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனை அவ்வி பிடிக்க வேண்டும். இப்படி செய்வதினால்  மூக்கில் உள்ள சதையை கரைத்து விடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> patti vaithiyam tamil tips

 

Advertisement