தாத்தா தலைவெட்டி பூ பயன்கள்
நண்பர்களுக்கு வணக்கம்..! நாம் வாழும் இவ்வுலகம் எப்படி மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும், சுற்று சூழல் மாசும், வாகன புகைகளும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் கிடையாது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவை மருந்தாக உண்டு உயிர் வாழ்ந்தார்கள். ஆனால் நாம் மருந்தை உணவாக உண்டு உயிர் வாழ்கிறோம். இதை தான் உணவே மருந்து என்ற காலம் மாறி, மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்கிறார்கள். சரி அதை விடுங்க. இது தான் நமக்கு தெரியுமே. இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக, தாத்தா தலைவெட்டி செடியின் பயன்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
சொடக்கு தக்காளியில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
மூக்குத்தி பூ செடியின் பயன்கள்:
பொதுவாக தாத்தா தலைவெட்டி பூ செடியை எல்லாருமே பார்த்திருப்போம். இதை மூக்குத்தி பூ, தாத்தா பூ செடி, தலைவெட்டி பூ செடி என்று சொல்வார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் சிறிய வடிவில் இருக்கும்.
இந்த பூச்செடி கிராமங்களில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் நாம் இந்த செடியில் இருக்கும் பூவை பறித்து விளையாடி இருப்போம். ஆனால் இந்த செடி யாரும் நம்ப முடியாத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.
காயங்களை குணப்படுத்த:
ஏதாவது ரத்த காயங்கள் ஏற்பட்டால், இந்த மூக்குத்தி பூ செடியின் இலைகளை கசக்கி, அதில் இருக்கும் சாறை காயத்தில் வைத்தால் இரத்தம் வருவது உடனே நின்றுவிடும். மேலும் காயமும் விரைவாக குணமாகும்.
நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டது தான் இந்த மூக்குத்தி பூ இலை.
தலைவலி நீங்க:
மூக்குத்தி பூ செடியின் இலைகளை பறித்து அதை சுத்தமாக கழுவி, அதனுடன் மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து கஷாயம் வைத்து குடித்து வந்தால், தலை வலி உடனே சரியாகும். தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
சரும பிரச்சனைகளை சரி செய்ய:
உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனை என்று சொல்லக்கூடிய தேமல், சொறி, அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. இதுபோன்ற சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த மூக்குத்தி பூ இலையின் சாறை கசக்கி தடவி வந்தால் இரண்டே நாட்களில் அது சரியாகும்.
வீட்டில் சொடக்கு தக்காளி வளர்ப்பது எப்படி.?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |