முடக்கு வாதம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

Advertisement

முடக்கு வாதம் தவிர்க்க வேண்டிய உணவுகள் – Mudakku Vatham Avoid Food in Tamil

வாத நோய் என்று வரும் போது வாதம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆக இந்த வாதம் நோய்க்கு என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க. ஆரோக்கியமான உணவு முறை, சரியான வாழ்கைமுறையை பின்பற்றி இருந்திருந்தாலே முடக்கு வாதம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆக இந்த முடக்கு வாதம் பிரச்சனைக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள குடித்து என்பது குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக பார்ப்போம் வாங்க.

முடக்கு வாதம் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பொதுவக்க முடக்கு வாதம் உள்ளவர்கள் அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகள், பால் பொருள்கள், சோடியம் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

முடக்குவாதம் பிரச்சனையால் ஏற்படும் விளைவுகளில் இருந்து விடுபட விரும்புபவர்கள் வெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதோடு சர்க்கரை சத்து மிகக் குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை உடனே நிறுத்த வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரைக்கீரை வாங்கி சமைப்பதற்கு முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

சாப்பிட வேண்டிய உணவுகள்:

முடக்கு வாதம் உள்ளவர்கள் சைவ உணவுகளை தேர்ர்வு செய்வதன் மூலம் முடக்கு வாதத்தைக் குறைக்கவும் அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கிறது.

குறைவாக கொழுப்பு சத்து உள்ள சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆப்பிள் பழத்தில் 0% கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆக அது போன்ற உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஆன்டி – இன்பிளமேட்டரி உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் உள்ளவர்கள் தினசரி உணவில் முழு தானியங்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

பச்சை காய்கறிகள், கீரைகள் மற்றும் ஃப்ரஷ்ஷான பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறைந்த அளவு உள்ள பாலினை ஒரு நாளுக்கு ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.

பால் குடிப்பதால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் என்றால் பாலிற்கு பதிலாக சோயா பால், பாதாம் பால், ஓட்ஸ் பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement