முசுமுசுக்கை நன்மைகள்
நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு மருந்தாக நாட்டு மருந்துகளை தான் எடுத்து கொண்டனர். அதனால் தான் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தனர். அதுமட்டுமில்லாமல் உடலிற்கு சத்தான உணவுகளை எடுத்து கொண்டனர். அதனால் தான் உடல் பலமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ளவர்கள் உடலிற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதில்லை. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றனர். இதனால் பாஸ்ட் புட்டை அதிகமாக சாப்பிடுகிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்கள் சாப்பிட மருத்துவ செடிகளை பற்றி கூறினாலும் அதை கேட்பதில்லை. ஏனென்றால் அவற்றில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் முசுமுசுக்கையில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
முசுமுசுக்கை நன்மைகள்:
காய்ச்சல் நீங்க:
கிராமங்களில் முசுமுசுக்கை அரைத்து மாவுடன் தோசையாக ஊற்றி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உடலில் உள்ள காய்ச்சல், சளி, இருமல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
பித்தம் மயக்கம்:
பித்தத்தினால் வரும் மயக்கத்தை சரி செய்வதற்கு முசுமுசுக்கை உதவுகிறது. இதற்கு நீங்கள் முசுமுசுக்கை இலையை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இதனை அடையாக தட்டி கொள்ளவும். இதனை ஒரு துணியில் வைத்து சூடாக தலையில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 5 முறை வைத்து எடுக்க வேண்டும்.
டூட்டி ஃப்ரூட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
நெஞ்சு வலி:
நெஞ்சு வலி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு முசுமுசுக்கை இலை சிறந்த மருந்தாக இருக்கிறது. இதற்கு முசுமுசுக்கை இலையை நெய்யில் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனால் காலை மற்றும் மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி, சளி, காய்ச்சல் போன்றவை சரியாகுவதற்கு உதவியாக இருக்கிறது.
கண் எரிச்சல் சரியாக:
முசுமுசுக்கை இலை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை நல்லெண்ணெய் கலந்து காய்த்து கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி குளிப்பதனால் கண் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சரியாகிவிடும்.
இரத்தம் சுத்தமாக:
முசுமுசுக்கை இலையை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக அரைத்து கொள்ளவும். இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்தம் சுத்தமடையும்.
தந்தூரி ப்ரோக்கோலி செய்யும் போது இதை சேர்த்தால் தான் சுவை மாறாமல் இருக்கும்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |