Nalangu Maavu Benefits
பொதுவாக நாம் இட்லி மாவுஅரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு மற்றும் புட்டு மாவு என இதுபோன்ற மாவு வகைகளை நம்முடைய வீட்டில் உபயோகபத்துவதை கேட்டு இருப்போம். அந்த வகையில் நலங்கு மாவு என்ற ஒன்றும் உள்ளது. நலங்கு மாவு பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது. இது மற்ற மாவினை போல சமையலுக்கு பயன்படுத்துவது அல்ல. அதாவது அழகிற்காக பயன்படுத்தும் மாவாக தான் உள்ளது. அதனால் நம்மில் பெரும்பாலான பெண்கள் நலங்கு மாவினை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதனை பயன்படுத்தினால் கூட இதில் நன்மைகள் என்ன என்று அவர்களுக்கு தெரியாமலே இருக்கிறது. எனவே இன்று நலங்கு மாவில் உள்ள நன்மைகள் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Chyawanprash நன்மைகள் பற்றி தெரியுமா.
நலங்கு மாவு பயன்கள்:
நலங்கு மாவினை நாம் கடைகளில் சென்று வாங்காமல் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். இத்தகைய மாவினை தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவர்களுக்கும் முகத்தில் பருக்கள் வரும் பிரச்சனை என்பது இருக்கிறது. அதனால் நலங்கு மாவினை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் வரும் பருக்கள் ஆனது விரைவில் மறைந்து மீண்டும் வருவதையும் தடுக்கிறது.
அதேபோல் பருக்களினால் வரும் கரும்புபுள்ளியினையும் மறைய செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலில் வியர்வை துறுநாற்றம் இருந்தால் அதனை சரி செய்வதற்கு நலங்கு மாவு சிறந்த ஒரு தீர்வினை அளிக்கிறது. ஆகவே நலங்கு மாவினை தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை துறுநாற்றம் போய்விடும்.
இத்தகைய மாவினை குளிக்கும் போது உடலில் தேய்த்து குளித்து வருவதன் மூலம் உடல் மற்றும் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறுகிறது.
நமது உடம்பில் தொடைகளுக்கு கீழ் ஒரு சிலருக்கு காணப்படும் பற்றுகளையும் நலங்கு மாவு நீக்குகிறது.
முகத்தில் எண்ணெய் பசை என்பது பலருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆகவே எண்ணெய் பசை உள்ளவர்கள் முகத்தில் நலங்கு மாவினை பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் பசை நீங்கி விடும்.
குழந்தைகளுக்கு இந்த மாவினை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் முகம் அழகாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது.
வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |