நெஞ்சு எரிச்சலுக்கு வீட்டு வைத்தியம்
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் ஓடி ஓடி உழைப்பது என்னவோ மகிழ்வான வாழ்க்கையினை வாழ மட்டுமே. அப்படி பார்த்தால் நமக்கு பிடித்த உணவு முதல் உடை என அனைத்தினையும் வாங்கி கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இத்தகைய ஆசை பணம் இருந்ததும் கூட எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனென்றால் நமக்கு பிடித்த ஆடையினை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் உணவு என்று வரும் போது எல்லோரிடமும் ஏதோ ஒரு பயம் இருக்கிறது.
அந்த வகையில் பாரத்தால் பலரும் உடலுக்கு தீமை தரக்கூடிய உணவினை தான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு சாப்பிட்ட பிறகு நெஞ்சு எரிச்சல், புட் பாய்சன் என இத்தகைய பிரச்சனைக்கு ஆளாகுகிறார்கள். அதுவும் இப்போது மழைக்காலம் என்பதால் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் நெஞ்சு எரிச்சலை செலவே இல்லாமல் குணப்படுத்தக்கூடிய வீட்டு வைத்தியம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
நெஞ்சு எரிச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்:
வீட்டு வைத்தியம்- 1
பொதுவாக அன்றாடம் சமைக்கும் சாப்பாடுகள் அனைத்திலும் சோம்பு மற்றும் சீரகம் சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இவை இரண்டும் உணவினை எளிதில் செரிமானம் அடையச் செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது.
- தண்ணீர்- 1 டம்ளர்
- சோம்பு அல்லது சீரகம்- 1 தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீருடன் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்றாக 1/2 டம்ளர் அளவிற்கு வரும் வரை கொதிக்க விடுங்கள். பின்பு அந்த நீரை மிதமான சூட்டில் இருக்கும் போது குடிப்பதன் மூலம் நெஞ்சு எரிச்சல் விரைவில் குணமாகும்.
வீட்டு வைத்தியம்- 2
பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து இருப்பதனால் அது நமது உடலுக்கு ஆற்றலையும், எலும்புகளை வலுப்பெறவும் செய்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் நெஞ்சு எரிச்சல் பிரச்சனையும் சரி செய்கிறது.
ஆகவே நீங்கள் தூங்க போகும் 1/2 மணி நேரம் முன்பாக காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும். இது உங்களுடைய நெஞ்சு எரிச்சல் பிரச்சனையினை குணப்படுத்த உதவும்.
வீட்டு வைத்தியம்- 3
வீடுகளில் காணப்படும் துளசி இலை சளி, இருமல் மற்றும் செரிமான கோளாறு பிரச்சனைகளை குணப்படுத்து சிறந்த ஒன்றாக காணப்படுகிறது. அப்படி பார்க்கையில் இவற்றை இல்லாமல் மற்றொரு பலனையும் இதில் அளிக்கிறது.
அதாவது வெறும் வாயில் துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வருவதன் மூலமாக நெஞ்சு எரிச்சல் பிரச்சனை எளிதில் குணமாகி விடும்.
இவற்றை எல்லாம் நீங்கள் செய்து வந்தாலும் கூட சாதாரணமான நாட்களை காட்டிலும் நெஞ்சு எரிச்சல் மற்றும் புட் பாய்சன் ஏற்படும் போது அதிக அளவு சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆகவே மிதமான சூட்டில் உள்ள நீரை குடிப்பதன் மூலம் நெஞ்சு எரிச்சலும் இருக்காது, உணவும் எளிய முறையிலும் ஜீரணம் ஆகிவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |