Nerunjil Powder Benefits in Tamil | நெருஞ்சில் முள் பொடி பயன்கள்
வணக்கம் நண்பர்களே. இன்றைய ஆரோக்கியம் பதிவில் நெருஞ்சில் முள் பொடியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளாலாம் வாங்க. நெருஞ்சில் செடி என்பது சாலையோரங்களிலும் வயல்வெளியில் படர்ந்து வளர்ந்து இருக்கும் மூலிகை செடி ஆகும். இச்செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் நம் உடலிற்கு தேவையான இன்றையமையாத சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளது.
நெருஞ்சில் செடி மூன்று வகைப்படும். அதாவது, சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில் (பெருநெருஞ்சில்) மற்றும் செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகளில் உள்ளது. இச்செடி முட்செடி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மேற்பகுதியில் சிறு சிறு முற்கள் காணப்படும். இச்செடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் ஆகிய அனைத்தும் மருத்துவகுணம் மிக்கவை. ஆகையால், இவற்றின் நன்மைகள் பற்றி இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மூக்குத்தி பூவில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா..
நெருஞ்சில் முள் பொடி பயன்கள்:
ஆண்மை பெருக:
நெருஞ்சி முள்ளை ஒரு குறிப்பிட்ட அளவு சேகரித்து அதனை பாலுடன் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு, அதனை நன்கு உலர்த்தி பொடியாக தயாரித்து, பாலுடன் 1/2 ஸ்பூன் கலந்து தினமும் காலை மாலை என இருவேலையும் அருந்தி வருவதன் மூலம், ஆண்மை பெருகும்.
சிறுநீரக கல் கரைய:
யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் போல் செய்து தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கல் நீங்கும். நெருஞ்சில் அனைத்தையும் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமை தயிரில் கலந்து காலை ஒரு வேலை மட்டும் குடித்துவருவதன் மூலம் சிறுநீரகம் சம்மந்தபதப்பட்ட அனைத்து பிரச்சனைகளை நீங்கும்.
சொடக்கு தக்காளியில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
வெள்ளைப்படுதல் நீங்க:
நெருஞ்சில் இலைகளை இடித்து பொடி செய்து காலை மாலை என இரண்டு வேலையும் பாலில் சேர்த்து, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வர வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும், வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கும்.
உடல் உஷ்ணம் குறைய:
நெருஞ்சில் செடி மற்றும் அருகம்புல் சிறிதளவு சேர்த்து, தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் போல் குடித்து வர உடல் உஷ்ணம் நீங்கும். மேலும், உடல் உஷ்ணத்தால் உண்டாகும் கண் எரிச்சல், கண் சூடு மற்றும் வயிற்று வலி போன்றவை குணமாகும்.
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |