நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

Advertisement

நிலக்கடலை நன்மைகள் 

நிலக்கடலையை வறுத்தும் சாப்பிடுவோம், இல்லையென்றால் சட்னியாக அரைத்தும் சாப்பிடுவோம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நிலக்கடலை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆக பெரும்பாலானவர்களின் வீட்டில் நிலக்கடலை தான் உள்ளது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளின் ருசியை  அறிந்தால் மட்டும் போதாது. அதனுடைய நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நிலக்கடலையின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..

1/4 கப் நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்:

  • கலோரிகள்: 207
  • புரதம்: 9 கிராம்
  • கொழுப்பு: 18 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 6 கிராம்
  • புரதம்: 9 கிராம்
  • ஃபைபர்: 3 கிராம்
  • சர்க்கரை: 1 கிராம்

நிலக்கடலை நன்மைகள்:

Grape Juice குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

இதய ஆரோக்கியம்:

 நிலக்கடலை தீமைகள்

நிலக்கடலையில் நிறைவுறா கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. கொலஸ்ட்ராலின் அளவை குறித்து இதய பிரச்சனை ஏதும் ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறது.

வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் அதிக அளவு கொழுப்பு இருந்தாலும், அவற்றில் உள்ள பெரும்பாலான கொழுப்புகள் “நல்ல கொழுப்புகள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகையான கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன.

உடல் எடை குறைய:

நிலக்கடலை நன்மைகள் 

உணவில் வேர்க்கடலையை சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். எப்படியென்றால் நிலக்கடலையில் கொழுப்பும், புரதமும் அதிகமாக உள்ளது.

சர்க்கரை நோய்:

நிலக்கடலை நன்மைகள் 

நிலக்கடையில் குறைந்த கிளைசெமிக் உணவாக இருக்கிறது. இதனால் நீங்கள் நிலக்கடலை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது.

புற்றுநோய் பிரச்சனை:

நிலக்கடலை நன்மைகள் 

நிலக்கடலை சாப்பிடுபவத்தால் வயிற்று புற்றுநோய் பிரச்சனை ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா

Nilakadalai Side Effects in Tamil:

வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். மேலும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

நிலக்கடையில் அதிக கலோரிகள் உள்ளது. கானல் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்க செய்யும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு 20 கல்லை தான் சாப்பிட வேண்டும். அதாவது ஒரு கைப்பிடி அளவு நிலக்கடையில் 170 கிராம் கலோரிகள் உள்ளது.

நிலக்கடலையை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனை, மலசிக்கல், வயிற்றுபோக்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடியது. அதனால் நிலக்கடலையை அளவாக சாப்பிடுவது நல்லது.

சில நேரங்களில் நிலக்கடலையானது அரிப்பு, வீக்கம், படை நோய், குமட்டல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்த கூடியது.

திராட்சை பழ ஜூஸினை அதிகம் குடிப்பவரா.. நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement