நிலப்பனை கிழங்கு நன்மைகள் | Nilapanai Kilangu Benefits in Tamil..!

Advertisement

Nilapanai Kilangu Benefits in Tamil 

பொதுவாக கிழங்கு வகைகளை அதிகமாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படி விரும்பி சாப்பிடக்கூடிய கிழங்கு என்றால் அது உருளை கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு தான். ஆனால் இத்தகைய கிழங்கு வகைகளில் நிலப்பனை கிழங்கும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலப்பனை கிழங்கினை நாம் அனைவரும் பார்த்து இருப்போம்.

ஆனால் இதனை அந்த அளவிற்கு யாரும் பெரிதாக சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இதை சாப்பிட்டால் என்ன பயன்கள் மற்றும் தீமைகள் என்பது சரியாக தெரியாமல் இருப்பதே காரணமாக அமைகிறது. அதனால் இன்று நிலப்பனை கிழங்கின் சத்துக்கள் மற்றும் பயன்கள் என்னென்ன என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

நிலப்பனை கிழங்கு பயன்கள்:

நிலப்பனை கிழங்கு பயன்கள்

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க:

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நிலப்பனை கிழங்கில் உள்ள சத்துக்கள் ஆனது கல்லீரை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதேபோல் கல்லீரல் வீக்கம் மற்றும் மஞ்சள் காமாலை இந்த இரண்டினையும் சரி செய்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.

வலி நோய் நீங்க:

வலி நோய்களுக்கு நிலப்பனை கிழங்கு மிகவும் உதவுகிறது.

சிறுநீர் பாதை தொற்று நீங்க:

நிலப்பனை கிழங்கில்டையூரிட்டிக் பண்பு உள்ளது. இது சிறுநீர் பாதையில் தேங்கியிருக்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றி சிறுநீர் பாதையில் உருவாகும் தொற்றினை போக்குகிறது. அதேபோல், சிறுநீர் கழிக்கும்போது உண்டாக்கும் எரிச்சலையும் குணப்படுத்துகிறது.

ஆண் மலட்டுத்தன்மை நீங்க:

இந்த கிழங்கானது அஸ்தெனோசோஸ்பெர்மியா மற்றும் ஒலிகோஸ்பெர்மியா என்று ஆண்களுக்கு காணப்படும் விந்தணு பிரச்சனையை குணம் அடையச்செய்து குழந்தை பெறும் தன்மையினை உண்டாக்குகிறது.

மாதவிடாய் பிரச்சனை தீர:

மாதவிடாய் பிரச்சனை குணமாகஇத்தகைய கிழங்கில் காணப்படும் பயோ ஆக்டிவ் என்ற சேர்மம் ஆனது பெண்களுக்கு காணப்படும் மாதவிடாய் பிரச்சனையை குணமாக்குகிறது. குறிப்பாக மாதவிடாய் வராமல் இருத்தல் மற்றும் மாதவிடாய் தள்ளிப்போதல் போன்ற பிரச்சனையினை குணம் அடைய செய்கிறது.

சிறுநீர் தொற்று நீங்க:

சிறுநீர் தொற்று

நம்மில் பெரும்பாலோனோருக்கு சிறுநீர் தொற்று பிரச்சனை காணப்படுகிறது. ஆனால் இத்தகைய பிரச்சனையினை குணமாக்குவதற்கு நிலப்பனை கிழங்கு ஆனது சிறந்த ஒன்றாக உள்ளது.

ஏனென்றால் இந்த கிழங்கில் உள்ள டையூரிக் பண்பு ஆனது சிறுநீர் பாதையில் தேங்கி நிற்கும் கழிவுகளை வெளியேற்றி சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சல் மற்றும் சிறுநீர் தொற்றினை நீங்க செய்கிறது.

பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்

அஜீரண கோளாறு நீங்க:

அஜீரண கோளாறு நீங்கநிலைப்பனை கிழங்கில் இருந்து கிடைக்கும் பொடி அஜீரண கோளாறுகளை நீக்க செய்கிறது. அதற்கு முதலில் நிலப்பனை கிழங்கினை நன்றாக வெயிலில் காய வைத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும்.

இப்போது அந்த பொடியில் தண்ணீர் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் அஜீரண கோளாறு நீங்கி விடும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுகிறது. இத்தகைய பண்பினை கொண்டுள்ள நிலப்பனை கிழங்கினை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கிறது.

மேலே சொல்லப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் வயிற்று போக்கு, வாந்தி, இடுப்பு வலி மற்றும் மூட்டு வலியினையும் குணப்படுத்த உதவுகிறது.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement