நோய் இல்லாமல் வாழ்வது எப்படி.?
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உடலில் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இது மாதிரி பிரச்சனைகள் வருவதற்கு காரணம் நீங்கள் தான். எப்படியென்றால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதில்லை, சரியான நேரத்திற்கு தூங்குவதில்லை, தண்ணீர் சரியாக குடிப்பதில்லை. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நீங்கள் பிரச்சனை வந்த பிறகு அதற்கான தீர்வை தேடி செல்வதை விட அந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் நம் உடலில் நோய் இல்லாமல் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
வெந்நீர் குடிக்க வேண்டும்:

பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் பல் துலக்கி விட்டு டீ, காபியை தான் குடிக்கிறார்கள். ஆனால் இது போல செய்வது தவறு. காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் இது போல தண்ணீர் குடிப்பது நமது வயிற்றை சுத்தமாக்கும்.
மலம் கழிப்பது:
நீங்கள் ஒரு நாளும் மலம் கழிக்காமல் காலை உணவை சாப்பிடாதீர்கள். இதுமட்டுமில்லாமல் தினமும் இரண்டு தடவை மலம் கழிக்க வேண்டும். காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் மலம் கழிக்க வேண்டும்.
கிரீன் டீ:
காலை உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீயில் சிறிதளவு எழுச்சியை சாறு குடிக்க வேண்டும். இதனை உங்களின் உணவு பக்கத்தில் தினமும் கொண்டு வாருங்கள்.
நெல்லிக்காய் ஜூஸ்:
தினமும் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் நாம் அதையெல்லாம் கேட்டிருக்க மாட்டோம். சரியாக உணவு மற்றும் சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் தான் உடலில் பல் நோய்கள் ஏற்படுகிறது. அதனால் தினமும் நெல்லிக்காய் ஜூஸ்களை குடிப்பது அவசியமானது. இதனின் விலை குறைவாகவும் இருக்கும், அதனால் எல்லாரும் வாங்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும்.
சிறுநீரக கல் கரைய உடற்பயிற்சி..!
இரவு உணவு:

இரவு நேரத்தில் அதிகமாக உணவுகளை உட்கொள்ளாமல் அதற்கு பதிலாக பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது போல காலை உணவை ஒருபோதும் சாப்பிடாமல் இருக்காதீர்கள். மதிய உணவில் சாதத்தை விட காய்கறிகளை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்:
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், உடலிற்கு தேவையான நீர் சத்துக்கள் குறைந்தாலும் பிரச்சனை ஏற்படும். அதனால் உங்களது உடலிற்கு தேவையான நீரை குடியுங்கள். அதுமட்டுமில்லாமல் தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் சிறுநீரக கல் கரைய இயற்கை மருத்துவம்
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |














