Noni Fruit Side Effects in Tamil | நோனி பழம் தீமைகள்
நாம் உண்கின்ற அணைத்து வகையான உணவுகளிலும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவுகளில் அதிகமாக நன்மைகள் இருந்தாலும் சிறிதளவு அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் உள்ளது. ஆகையால், நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவுப்பொருளிலும் இருக்கும் நன்மைகள் மற்றும் அதன் பக்கவிளைவுகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆகையால், இப்பதிவின் வாயிலாக நோனி பழத்தின் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நோனி என்பது ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். இது ஹவாய், ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற தென்கிழக்கு நாடுகளில் அதிகம் விளையக்கூடியது. இது 30 அடி வரை வளரக்கூடிய தாவரமாகும். இதனை பெரும்பாலும் ஜூஸ் மற்றும் டீ ஆக எடுத்து கொள்வார்கள்.இதில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இருந்தாலும் இதனால் சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?
நோனி பழத்தின் பக்க விளைவுகள்:
- நோனி பழத்தை தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக உட்கொண்டு வரும்போது கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நோனி பழம் அதிகமாக எடுத்துகொல்வதன் மூலம் கல்லீரல் அதிக சேதம் ஏற்படுகிறது.
- நோனி பழம் சிலருக்கு குமட்டல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் தசை பலவீனம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
- முக்கியமாக ஹைபர்கேமியா (இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம்) உண்டாகும். அதாவது, நோனியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலில் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கும்.
- சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் நோனி பழத்தை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கும்: நோனி பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதாலும், அது இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. தாழ்ந்த இரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் மயக்கம் அல்லது மந்தநிலை ஏற்படலாம்.
- சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தலாம்: நோனி பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருக்கும். சிறுநீரக நோய் (Kidney disease) உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், பொட்டாசியம் அளவு அதிகரித்து சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.
- ஜீரண பிரச்சனை: நோனி பழம் சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற ஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிகப்படியாக சாப்பிடுவது வயிற்று வலியை உருவாக்கலாம்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து: நோனி பழம் கருப்பைத் தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், கரு சிதைவு அல்லது முன்பிரசவம் ஏற்படக்கூடும்.
- கொழுப்புத் திசுக்கள் அதிகரிப்பு: நோனி பழச்சாறு (Noni juice) உடல் எடையை அதிகரிக்கக்கூடிய கொழுப்புத்தன்மை கொண்டது. அதனால், உடல் எடை கட்டுப்படுத்த விரும்பும்வர்களுக்கு அதிகப்படியாக சாப்பிடுவது ஏற்றதல்ல.
நோனி பழம் எப்படி சாப்பிடுவது.?
நோனி பழத்தில் ஜூஸ் அல்லது டீ செய்து சாப்பிட்டு வரலாம். மேலும், பழச்சாறுகள், பொடிகள், காப்ஸ்யூல்கள் போன்ற வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் முழுமையாக பழுத்த நோனி பழத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, வடிகட்டி கொண்டு அதன் சாற்றினை மற்றும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துங்கள்.
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |