Omelette vs Boiled Egg Which is Better in Tamil
நாம் அனைவருக்குமே முட்டையில் அதிக சத்துக்கள் இருக்கிறது என்பது தெரியும். இருந்தாலும், நாம் அனைவருக்கும் இதில் பெரிய குழப்பம் ஒன்று இருக்கும். அதாவது, எந்த முட்டையில் அதிக சத்துக்கள் உள்ளது.? எந்த முட்டை நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.? என்ற சிந்தனை இருக்கும். அதிலும் முக்கியமாக, பலபேருக்கு, உடல் ஆரோக்கியத்திற்கு அவித்த முட்டை நல்லதா.? ஆம்லெட் நல்லதா.? என்ற சந்தேகம் இருக்கும். எனவே உங்கள் சந்தேகத்திற்கு விடை அளிக்கும் விதமாக இப்பதிவு அமைப்பும். ஓகே வாருங்கள் படித்து எந்த முட்டை உடல் நலத்திற்கு சிறந்தது.? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
Which One is Healthy Omelette or Boiled Egg in Tamil:
முட்டையில் உள்ள சத்துக்கள்:
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முட்டையில் அடங்கியுள்ளது. அதாவது, ஒரு முட்டையில் 72 கலோரிகள், 6 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி
- வைட்டமின் சி
- வைட்டமின் டி
- வைட்டமின் இ
அவித்த முட்டை:
அவித்த முட்டையில் புரதத்தின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. வேகவைத்த முட்டையை நாம் சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்டசத்துக்கள் அனைத்தும் முழுமையாக நம் உடலிற்கு சென்றடைகிறது.
வேகவைத்த முட்டையில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, கோலின் மற்றும் ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி எது நல்லது
ஆம்லெட்:
ஆம்லெட்டில் நார்ச்சத்து, இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆம்லெட்டுடன் காய்கறிகள், எண்ணெய், நெய் மற்றும் சுவைக்கேற்ற பல பொருட்களை சேர்ப்பதால், இதில் நார்ச்சத்தும் கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு அவித்த முட்டை நல்லதா..? ஆம்லெட் நல்லதா..?
அவித்த முட்டை மற்றும் ஆம்லெட் இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் அவித்த முட்டையே சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால், அவித்த முட்டையில் தான் அதிக அளவில் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, அவித்த முட்டை நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சிறந்த ஒன்றாக இருக்கிறது.
ஆம்லெட்டில், புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதன் கூடவே தேவையற்ற அதிக கொழுப்புகளும், கலோரிகளும் நிறைந்துள்ளது.
எனவே, உங்களுக்கு முட்டையின் அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அவித்த முட்டைதான் சிறந்தது.
குளிர்ந்த தண்ணீர் குளியல் Vs சுடுதண்ணீர் குளியல் எது சிறந்தது
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |