Palak Keerai Benefits in Tamil
நமக்கு சிறு வயதிலிருந்தே சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதில் ஒன்று தான் கீரை. ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்து நிறைந்துள்ளது. ஆனால் நாம் தான் அந்த கீரையை பார்த்தாலே பிடிக்காது என்று கூறுகிறோம்.
வாரத்தில் இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. நீங்கள் ஒவ்வொரு கீரையிலும் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டாலே அதை தானாக சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் தான் இந்த பதிவில் பாலக் கீரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம்.
பாலக் கீரை உள்ள சத்துக்கள்:
பாலக் கீரையில் மெக்னீசியம்,காப்பர், புரதச்சத்து, வைட்டமின் கே, ஜின்க், பொட்டாசியம், இரும்பு சத்து, போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடல் சூடு:
உடல் சூட்டினால் பெரும்பாலானவர்கள் கஷ்டப்படுவார்கள். உடல் சூடு அதிகரித்தால் பல பிரச்சனை ஏற்படும். இந்த கீரையானது குளிர்ச்சி தன்மை உடையது, அதனால் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் உடல் சூடு தணியும்.
மேலும் இதில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் நாம் சாப்பிடும் உணவுகளை விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவுகிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்
எலும்பு பலம் பெற:
பாலக் கீரையானது எலும்புகளை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பற்களை உறுதி செய்யவும் உதவுகிறது. அதனால் நீங்க இந்த கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்து கொள்வது சிறந்தது.
போலிக் ஆக்சிடு:
இந்த கீரையில் போலிக் ஆக்ஸைடு அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது, மேலும் குழந்தைகாக முயற்சி செய்யும் தம்பதிகளும் இந்த கீரையை எடுத்து கொள்வது சிறந்தது. மேலும் இரத்த சோகை பிரச்சனை வராமலும் பாதுகாத்து கொள்கிறது.
சர்க்கரை அளவு:
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு இந்த கீரை உதவுகிறது. அதனால் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிடுவது நல்லது.
கண்ணிற்கு நல்லது:
பாலக் கீரையில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வை குறைவாக உள்ளவர்கள் எடுத்து கொள்வது சிறந்தது. அதனால் உங்களுக்கு கண் பார்வை பிரச்சனை இருந்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் பாலக் கீரையை எடுத்து கொள்ள வேண்டும்.
கொழுப்பு குறைய:
பாலக் கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, அதனால் இந்த கீரையை எடுத்து கொள்வதன் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த குழாய் அடைப்பு, இதய பிரச்சனை போன்றவை வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
ஒரு மாசத்துக்கு டீ, காபிக்கு நோ சொல்லுங்க என்ன நடக்குதுன்னு பாப்பும்..
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |