கணைய புற்றுநோய்
நம் முன்னோர்களின் காலத்தில் தாத்தா பாட்டிகள் எல்லாம் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டடத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கூட நோய்கள் இருக்கிறது. அதிலும் புற்றுநோய் என்பது ஊரில் ஒருவருக்கும் வரும் நம் முன்னோர்களின் காலத்தில், ஆனால் இன்றைய காலத்தில் அவை சர்வ சாதாரணமாகி விட்டது. புற்றுநோயை ஆரம்பத்திலையே கண்டறிந்தால் தான் அதனை குணப்படுத்துவது ஈசியாக இருக்கும். புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கிறது. அதில் உள்ள எல்லாவற்றையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய கணைய புற்றுநோயை பற்றி தெறித்து கொள்வோம் வாங்க..
கணைய புற்றுநோய் என்றால் என்ன.?
நமது வயிற்று பகுதியில் பின்புறத்தில் தான் கணையம் இருக்கிறது. இதில் உள்ள திசுக்கள் மீது புற்றுநோய் வளர்வதை கணைய புற்றுநோய் என்றழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடுகின்ற உணவை செரிமான ஆக்குவதற்கு தேவையா திரவத்தை கணையம் தான் உற்பத்தி செய்கிறது. மேலும் இரத்த சர்க்கரை சமமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது வயிற்றுக்கு பின்னால் அமைந்துள்ள சுரப்பியான கணையத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருக்கெடுக்க ஆரம்பிக்கும் போது கணைய புற்று நோய் உருவாகிறது. இந்த புற்றுநோய் உயிரணுக்கள் மெல்ல மெல்ல உடலின் பிற பாகங்களையும் பாதிக்க செய்கிறது.
கணையம் பற்றி யாருக்கும் தெரியாத சில குறிப்புகள்..!
கணைய புற்றுநோய் வகைகள்:
கணையத்தில் உருவாகும் புற்றுநோயை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. கணையம் நாளமில்லா சுரப்பி மற்றும் எக்ஸோகிரைன் சுரப்பி ஆகும். நாளமில்லா சுரப்பிகள் இரசாயனங்களை நேரடியாக இரத்த ஓட்டத்தில் சுரக்கின்றன, அதே சமயம் எக்ஸோகிரைன் சுரப்பிகள் ஒரு குழாய் வழியாக இரசாயனங்களை சுரக்கின்றன. கணையத்தில் உருவாகும் புற்றுநோயின் தோற்றத்தைப் பொறுத்து, கணைய புற்றுநோய் இரண்டு வகைகளாக உள்ளது, அவை,
- எக்ஸோகிரைன் கணையப் புற்றுநோய்
- நாளமில்லா கணைய புற்றுநோய்
கணைய புற்றுநோய் ஏற்பட காரணம்:
கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது புகை பிடிப்பதும், மது அருந்துவதனால் ஏற்படுகிறது. மேலும் வைட்டமின் டி குறைவாக இருந்தாலும் கணைய புற்றுநோய் ஏற்படும்.
செல்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து ஒரு இடத்தில் குவிக்கின்றது. இந்த செல்களானது கட்டியை உருவாக்குகின்றது. இதனால் கணையை புற்றுநோய் ஏற்படுகிறது.
கணைய புற்றுநோய் ஏற்பட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்:
ஒருவருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..
- தொடர்ந்து வயிற்று வலி
- குடல் அடைப்பு
- மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய்
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |