பன்னீர் பூவின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

பன்னீர் பூவின் நன்மைகள் | Paneer Poo Benefits in Tamil

பொதுவாக எந்த ஒரு செடி அல்லது மரமாக இருந்தாலும் அதில் காய்கள், பூக்கள் மற்றும் பழங்கள் என இவை அனைத்துமே அதில் காணப்படும். அந்த வகையில் பார்த்தால் இவை அனைத்திலும் நம்முடைய உடலுக்கு தேவையான ஏதோ ஒரு சத்துக்கள் ஆனது நிறைந்து இருக்கிறது. ஆனால் நாம் அனைவருக்கும் காய்கள் மற்றும் பழங்களில் காணப்படும் சத்துக்கள் மட்டுமே தான் தெரியும். ஏனென்றால் பூக்களில் நாம் அதிகமாக சத்துக்கள் இருப்பதை பற்றி கேள்வி பட்டிருப்பது இல்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான சத்துக்கள் எந்தந்த பூக்களில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்வது நல்லது. ஆகையால் இன்று பன்னீர் பூவில் உள்ள பயன்கள் என்ன என்று பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா 

பன்னீர் பூ நன்மைகள்:

சர்க்கரை நோய் குணமாக:

சர்க்கரை நோய் குணமாக

பன்னீர் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் முதல்நாள் இரவே ஒரு பீங்கான் பாத்திரத்தில் பன்னீர் பூவினை ஊறவைத்து பின்பு காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாட்கள் குடிப்பதன் மூலம் சர்க்கரை நோய் விரைவில் குணமாகும் என்று கூறப்படுகிறது.

ஆஸ்துமா குணமாக:

ஆஸ்துமா குணமாக

அதுமட்டும் இல்லாமல் பன்னீர் பூவினை நாம் சரியான அளவில் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனை கூடிய விரைவில் சரியாகிவிடும். மேலும் இதனை நாம் சரியான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

தூக்கமின்மை நீங்க:

தூக்கமின்மை நீங்க

தூக்கமின்மை பிரச்சனைக்கு பன்னீர் பூ ஒரு சிறந்த பயன்பாடாக இருக்கிறது. அதனால் பன்னீர் பூவினை தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் குடித்து வருவதன் மூலம் தூக்கமின்மை மற்றும் நரம்பு சோர்வு பிரச்சனை இருந்தாலும் நீங்கி விடுமாம்.

கணையத்தில் இன்சுலின் சுரக்க:

கணையத்தில் இன்சுலின் சுரக்க

இந்த பன்னீர் பூ ஊறவைத்த தண்ணீரை நாம் அருந்துவதன் மூலம் கணையத்தில் பீட்டா செல்களை குணப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் இன்சுலின் பயன்பாட்டையும் அதிகரிக்க செய்கிறது. 

இவ்வாறு செய்வதன் மூலம் டைப்– 2 நீரழிவு நோயினால் இன்சுலின் செயல்பாட்டை குறைக்க முடியும்.

பயன்படுத்தும் முறை:

மேலும் இந்த பூக்களை பீங்கான் பாத்திரத்திலும் ஒரு நாளைக்கு 3 பூக்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இதனை நீங்கள் நீரிழிவு நோயினை சரி செய்வதற்காக எடுத்துக்கொண்டாலும் கூட அடிக்கடி சர்க்கரையின் அளவினை சரி செய்ய வேண்டும்.

மாப்பிள்ளை சம்பாவின் நன்மைகள் 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement