பனிவரகு சிறுதானிய அரிசியின் பயன்கள் | Health Benefits Of Panivaragu millet in Tamil
நாம் முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானிய வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவே மருந்து என்பது மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுடன் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறுதானிய பயிர்கள் உடலுக்கு பல சக்தியை வழங்குகிறது. அந்தவகையில் இன்று உடலுக்கு பெரும்பாலான சக்திகளை தரக்கூடிய பனிவரகு சிறுதானியத்தை பற்றி இந்தப்பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
பனிவரகு சிறுதானிய அரிசியின் பயன்கள்:
சிறுதானியங்களில் பனிவரகுக்கு என்றும் முக்கிய இடமுண்டு. இது குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியில் வளர கூடியது. அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர் வந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் ‘Proso Millet’ என அழைப்பார்கள். சிறுதானியங்களில் மிகவும் குறைந்த நாட்களிலே வளரும் தன்மையுடையது பனிவரகு. இது குறுகிய கால வயதுடைய தாவர பயிராகும். இந்த பனிவரகு வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு வகை சிறுதானிய பயிர் வகையாகும். பனிவரகு 90 செ.மீ முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
பனிவரகில் நிறைந்துள்ள சத்துக்கள்:
பனிவரகில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள், மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பி காம்ளக்ஸ், தாதுக்கள், கலோரிகள், ரிபோஃப்ளோவின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர் மற்றும் குளோரைடு ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
பனிவரகின் மருத்துவ பயன்கள்:
1. நரம்பு மண்டலத்தை பலமாக்கி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
2. பனிவரகு உடலில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
3. சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
4. இளநரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கல்லீரலில் உண்டாகும் கற்களை கரைக்கும். மேலும் கற்கள் உருவாகாமல் தடுக்கும். உடலில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளை போக்கும். அலர்ஜியை ஏற்படுத்தாது.
6. அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் புண்களை விரைவில் ஆற்றும்.
7. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்.
8. வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
9. வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை போக்கும்.
10. ரத்தஅழுத்தம், மற்றும் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
11. வரகு அரிசியை பயன்படுத்தி கஞ்சி செய்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
12. சிறுநீர்பெருக்கியாக செயல்படும், மலச்சிக்கலை போக்கும், மேலும் உடல் பருமனை குறைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |