Papaya Seed Benefits
பொதுவாக நாம் அனைவரும் உணவை விட அதிக சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருப்பதனால் இதனை தான் சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் பார்த்தால் நாம் ஒரு பழம் காயாக இருந்தாலோ அல்லது பழமாக இருந்தாலும் நாம் சாப்பிடுபவோம். அதேபோல் சாப்பிட்டு முடித்த பிறகு பழங்களில் தோல் மற்றும் கொட்டையினை கீழே போட்டு விடுவோம். ஏனென்றால் தோல் மற்றும் கொட்டையில் சத்துக்கள் எதுவும் இருக்காது, அதனால் இதை சாப்பிட்டால் என்ன..? சாப்பிடாவிட்டால் என்ன என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம். இவ்வாறு நாம் நினைப்பது என்பது தவறு. ஏனென்றால் பழங்களில் உள்ள கொட்டை மற்றும் தோல்களில் நிறைய சத்துக்கள் இருக்கும். அந்த வகையில் இன்று பப்பாளி பழத்தில் உள்ள கொட்டையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகள் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பழங்களும் அதன் மருத்துவ பயன்களும்
பப்பாளி விதை நன்மைகள்
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க:
பப்பாளி விதையில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அப்படி பார்த்தால் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆனது நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவு மற்றும் திரவத்தினை வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
குடல் ஆரோக்கியம்:
மற்ற பழம் மற்றும் காய்கறிகளை போலவே பப்பாளி விதையிலும் நார்சத்து உள்ளது. அதனால் பப்பாளி விதையினை நாம் சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் நமது குடல் இயக்கத்தினை சிறப்பாக வைத்து, நச்சுக்களை வெளிற்றுவதனால் மலச்சிக்கல் பிரச்சனை என்பது வராமல் இருக்க உதவுகிறது.
கேன்சர் வராமல் தடுக்கும்:
பப்பாளி விதையினை ஜூஸ் செய்து சரியான அளவில் குடித்து வருவதன் மூலம் நமது புற்றுநோய் வருவதற்கு காரணமாக உருவாகும் செல்களை அழித்து புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது.
பூஞ்சை தொற்று தீர்வு:
பப்பாளி பழத்தில் இருக்கக்கூடிய விதையினை நாம் சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள நோய் எதிர்ப்பு பண்பு பூஞ்சை தொற்றுகள் வருவதை தடுத்து ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கிறது.
எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் |
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை:
இத்தகைய விதையினை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் காலங்களில் வரும் வயிறு மற்றும் இடுப்பு வலி பிரச்சனையினை குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாயினையும் அதிகரிக்கச்செய்கிறது.
உயர் இரத்த அழுத்தம் குறைய:
பொதுவாக நமது உடலில் இதய ஆரோக்கியம் என்பது சரியாக இருந்தாலே மற்ற பிரச்சனைகள் எதுவும் வராது. அந்த வகையில் பப்பாளி விதை இதய ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டும் இல்லமால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவினை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கீல்வாதம் குணமாக:
அது மட்டும் இல்லாமல் இந்த விதைகள் உடலில் ஏற்படும் வீக்கத்தினையும், கீழ் வாதத்தினால் ஏற்படும் வீக்கத்தினை குறைக்கவும் அதிகப்படியான நன்மையினை அளிக்கிறது.
சருமம் பளபளப்பாக:
இத்தகைய விதையில் 1/4 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை சிறிது பாலில் கலந்து முகத்தில் மசாஜ் செய்து வருவதன் மூலம் முகத்தில் காணப்படும் சுறுக்கம் மற்றும் கரும்புள்ளிகள் என இவை அனைத்தும் நீங்கி முகம் பளபளப்பாக மாறிவிடும்.
எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |