Passion Fruit Benefits in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனமகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களின் உணவில் கண்டிப்பாக ஆரோக்கியமானவற்றை தான் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவருமே தங்களின் உணவினை பார்த்து பார்த்து தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள். அப்படி நாம் ஆரோக்கியமான உணவுகள் என்ற பட்டியலை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அதில் பழங்கள் இடப்பெற்றிருக்கும். ஆம் நண்பர்களே பழங்களில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது நமக்கு தெரியும். ஆனால் எந்தெந்த பழங்களில் எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது நமக்கு தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் பேஷன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க..
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா
பேஷன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
பொதுவாக இந்த பேஷன் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, சர்க்கரைகள், அமிலங்கள், சோடியம், மெக்னீசியம், சல்பர், குளோரைடுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பேஷன் பழத்தின் நன்மைகள்:
இப்பொழுது நாம் பேஷன் பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம்.
1. நீரிழிவு நோய்க்கு சிகிச்சை:
பொதுவாக இந்த பேஷன் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையை அளிக்கலாம். அதாவது இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் பசியைத் தடுக்கிறது.
இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைக்கப்படுகிறது.
2. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது:
பேஷன் பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதனால் உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதும் குறைக்கப்படுகிறது.
பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும் ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா
3. புற்றுநோய்யை தடுக்கிறது:
புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பேஷன் பழத்தில் நிரம்பியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற பினாலிக் கலவைகள் உள்ளது இவைகளும் புற்றுநோய்யை தடுக்கிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டின் மற்றும் கிரிப்டோக்சாந்தின் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. அதாவது இதில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை சரியாக பராமரிக்க உதவுகிறது. இதனால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
இதை தெரிஞ்சிக்காம மட்டும் கம்பினை சாப்பிடாவே சாப்பிடாதீங்க
5. செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது:
பேஷன் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது நமது செரிமான மண்டலத்தை சரியாகவும் ஆரோக்கியமாகவும் பராமரித்து கொள்ள உதவுகின்றது.
6. சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுத்த:
பொதுவாக பேஷன் பழம் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும், இது குறிப்பாக சருமத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து ஆகும். மேலும் இதில் உள்ள மற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் ஆகியவையம் சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
இதைமட்டும் தெரிஞ்சிக்கிட்டீங்கனா மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க மாட்டிங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |