Pine Nuts Benefits in Tamil | பைன் நட்ஸ் பயன்கள்
பைன் நட்ஸ் ஆனது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் விளையக்கூடியது ஒரு உண்ணக்கூடிய பருப்பு ஆகும். இந்த பைன் நட்ஸ் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பைன் நட்ஸில் 25 -திற்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், முக்கியமான 4 வகைகள் மட்டும்தான் அதிமாக உண்ணப்படுகின்றன. ஆனால், நட்ஸ் வகைகளில் பைன் நட்ஸ் என்று ஒன்று இருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரியாது. எனவே, பைன் நட்ஸின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பைன் நட்ஸ் என்றால் என்ன என்பதே நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், பைன் நட்ஸ் என்றா என்ன.? அதனை உண்ணுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Pine Nuts in Tamil:
பைன் நட்ஸ் -ஐ தமிழில் தேவதாரு கொட்டை என்று கூறுவார்கள். இதுதான் இதனுடைய தமிழ் பெயர்.
What are Benefits of Pine Nuts in Tamil:

ஆற்றலை அளிக்கிறது:
பைன் நட்ஸில் நம் உடலிற்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. அதாவது , பைன் நட்ஸ் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்றவை சிறந்த மூலமாக உள்ளது. எனவே, தினமும் சிறிதளவு பைன் நட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் இருக்கும்.
ஹேசல் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

பைன் நட்ஸில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் நல்ல கொழுப்பை ஊக்குவிக்கும். இந்த கொழுப்புகள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
பைன் நட்ஸில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, தினமும் ஒரு பைன் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் கண்களில் பார்வை திறன் அதிகரித்து கண் ஆரோக்கியம் மேம்படுகிறது.
எலும்புகள் வலுப்பெற:
பைன் நட்ஸில் உள்ள விட்டமின் கே ஆனது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுப்பதோடு எலும்புகளை வலுவாகவும் வைத்துக்கொள்கிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

பைன் நட்ஸில் உள்ள மக்னீசியம் மற்றும் துத்தநாகம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக அறிவாற்றல் மற்றும் நினைவகத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
பிரேசில் நட்ஸ் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது:
பைன் நட்ஸில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பைன் நட்ஸ் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |














