சங்கரா மீன் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Pink Perch Fish in Tamil

நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் மீனிற்கு அடிமையாகிய ஒரு கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் மீனில் கெண்டை மீன், கெளுத்தி மீன், சங்கரா மீன், சிலேப்பி மீன் மற்றும் கடல் மீன் என பல வகைகள் இருக்கிறது. இத்தனை வகையான மீன்கள் இருந்தாலும் கூட சிலருக்கு ஏதோ ஒரு மீன் மட்டும் தான் பிடிக்கும் வகையில் இருக்கும். அதிலும் குறிப்பாக மீன் வறுவல் ஆனது நாம் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் மீன் நமக்கு பிடித்த ஒன்றாக இருந்தாலும் கூட அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அதற்கு முதலில் மீன்களில் உள்ள நன்மைகளை ஓரளவு தெரிந்துக்கொள்வது நல்லது. எனவே இன்று சங்கரா மீனில் உள்ள பயன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

சங்கரா மீன்ல் உள்ள சத்துக்கள்:

நாம் சாப்பிடும் 100 கிராம் சங்கரா மீனில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம், பாஸ்பரஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் சோடியம் என பல வகையான சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

மேலும் மற்ற மீன்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சங்கரா மீனில் அதிகப்படியான புரதம் நிறைந்து இருக்கிறது.

சங்கரா மீன் பயன்கள் – Sankara Fish Benefits in Tamil:

நரம்பு மண்டலம் வலுப்பெற:

sangara fish benefits in tamil

சங்கரா மீனில் வைட்டமின் A, பொட்டாசியம், ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் செலினியம் நிறைந்து இருப்பதனால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடம்பில் காணப்படும் நரம்பு மண்டலம் ஆனது வலுப்பெறுகிறது.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய

இந்த மீனில் பொட்டாசியம் சத்து ஆனது இருக்கிறது. அதனால் சங்கரா மீனை நாம் சரியான அளவில் சாப்பிட்டு வருவதன் மூலம் நமது உடல் ஆனது குறைகிறது. எனவே உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களை சரியான உடல் அமைப்பிற்கு கொண்டு வர சங்கரா மீன் நன்மை அளிக்கிறது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா 

இருதய ஆரோக்கியம்:

இருதய ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் மற்ற மீன்களில் இருக்கும் ஒமேகா 3 அமிலங்கள் இதிலும் இருக்கிறது. அதனால் சங்கரனை மீனை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் இதயம் ஆனது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

மேலும் இதயத்தில் பெரும்பாலும் பிரச்சனைகள் வருவதையும் தடுக்கிறது.  இரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது.

வெள்ளை இரத்த அணுக்கள்: 

வெள்ளை இரத்த அணுக்கள்

கடல் மீன் ஆகிய சங்கரா மீனில் செலினியம் இருக்கிறது. ஆகவே நாம் இந்த மீனை சரியான அளவில் உணவாக சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் நமது உடலில் காணப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா 

கண்புரை குணமாக:

கண்புரை குணமாக

வைட்டமின் சத்துக்கள் சங்கரா மீனில் நமது உடலுக்கு தேவையான அளவு நிறைந்து இருக்கிறது. அதனால் சங்கரா மீனை சாப்பிடுவதன் மூலம் கண் புரை குணமாகவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

எனவே சங்கரா மீன் பல வகையான சத்துக்களை கொண்டிருந்தாலும் கூட அதனை அளவோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement