Pista Benefits in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனமகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களின் உணவில் கண்டிப்பாக ஆரோக்கியமானவற்றை தான் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவருமே தங்களின் உணவினை பார்த்து பார்த்து தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள். அப்படி நாம் ஆரோக்கியமான உணவுகள் என்ற பட்டியலை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அதில் பிஸ்தா பருப்பு இடப்பெற்றிருக்கும். ஆம் நண்பர்களே பிஸ்தாவில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் பிஸ்தாவை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும் ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா
பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
1/4 கப் பிஸ்தாவில்,
- கலோரிகள் – 165 கிராம்
- கொழுப்பு – 13.4 கிராம்
- சோடியம் – 2மி.கி
- கார்போஹைட்ரேட் – 7.8 கிராம்
- ஃபைபர் – 2.8 கிராம்
- சர்க்கரை – 2.1 கிராம்
- புரதம் – 5.8 கிராம்
- பொட்டாசியம் – 277 மி.கி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
Pistachio Benefits in Tamil:
பொதுவாக யாரையாவது கிண்டல் செய்ய வேண்டும் என்றால் அவரை பார்த்து நீ என்ன பெரிய பிஸ்தாவ என்று கேட்போம். ஏன் அப்படி சொல்கிறோம் என்று என்றாவது சிந்தனை செய்துள்ளீர்களா..?
ஏனென்றால் நட்ஸ் வகைகளிலேயே இதன் விலை தான் அதிகம். அதேபோல் இதில் மற்ற நட்ஸ்களை காட்டிலும் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பிசித்தவை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம் வாங்க.
இதை தெரிஞ்சிக்காம மட்டும் கம்பினை சாப்பிடாவே சாப்பிடாதீங்க
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க:
பிஸ்தா ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு நமது மூளையின் செய்யல்பட்டை அதிகரிக்கிறது. அதனால் நமது நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது:
பிஸ்தாவை சாப்பிடுவதால் நமக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. அதேபோல் நீரிழிவு நோயாளிகள் இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் இது அவர்களின் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதைமட்டும் தெரிஞ்சிக்கிட்டீங்கனா மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க மாட்டிங்க
இதய நோய் வராமல் தடுக்க:
பொதுவாக இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருந்தால் நமக்கு இதய நோய் ஏற்படாது. பிஸ்தாவில் மற்ற பருப்புகளை காட்டிலும் கொழுப்பு குறைவு.
இதனால் இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பை கட்டுக்குள் வைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
எடை குறைய:
பிஸ்தாவில் அதிக அளவு நார்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த பிஸ்தாவை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாது.
அதனால் அடிக்கடி சாப்பிடுவது குறையும் இதனால் உங்களின் உடல் எடையும் குறையும்.
குடலுக்கு நல்லது:
பிஸ்தா பருப்புக்களில் உங்கள் குடலுக்கு நன்மை விளைவிக்கும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. உங்கள் வயிறு எளிதில் நிரம்பியதை போன்ற உணர்வை கொடுக்கும். அதேசமயம், ஜீரணத்தை ஊக்கப்படுத்தி, மலச்சிக்கலை குறைக்கும்.
சேப்பக்கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |