Poolankilangu Benefits in Tamil | பூலாங்கிழங்கு பயன்கள்
உணவுகளை பொறுத்தவரை நமக்கு பிடித்த உணவுகளும் இருக்கும், பிடிக்காத உணவுகளும் இருக்கும். அந்த வகையில் நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடக் கொடுத்தால் வேண்டாம் என்று கூறாமல் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவோம். அதுவே நமக்கு பிடிக்காத உணவுகளை கொடுத்தால் சாப்பிடுவதற்கே கொஞ்சம் யோசிப்போம். ஆனால் இவ்வாறு நாம் இந்த உணவு நமக்கு பிடிக்காது அல்லவா..? எப்படி இதை வேண்டாம் என்று சொல்வது என்பதை யோசிக்கலாம் 1 நிமிடம் அதில் உள்ள சத்துக்களை மட்டுமே யோசித்து பார்த்தால் போதும் நமக்கான தீர்வு கிடைத்து விடும். ஏனென்றால் ஒவ்வொரு உணவு பொருளிலும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. அத்தகைய வரிசையில் இன்று பூலாங்கிழங்கின் பயன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்
பூலாங்கிழங்கு பயன்கள்:
அலர்ஜி குணமாக:
பூலாங்கிழங்கினை வெள்ளை மஞ்சள் என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த பூலாங்கிழங்கில் குர்குமின் மற்றும் பிஸ்டெமெத்தாக்ஸிகுர்குமின் இருப்பதால் இது அலர்ஜியினை குணப்படுத்த உதவுகிறது.
ஆகையால் பூலாங்கிழங்கினை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பின்பு அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடித்து வருவதன் மூலம் தொண்டை மற்றும் சளி அலர்ஜி சரியாகிவிடும்.
கேன்சர் வராமல் தடுக்கிறது:
வெள்ளை மஞ்சளில் புற்றுநோயினை எதிர்க்கக்கூடிய பண்புகள் அதிகமாக இருப்பதனால் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இரைப்பைப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயினை வராமல் தடுக்க உதவுகிறது.
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் |
பூலாங்கிழங்கு அழகு குறிப்புகள் | Poolankilangu Benefits for Skin in Tamil:
தினமும் குளித்து முடித்த பிறகு முகத்திற்கு பூலாங்கிழங்கினை போட்டு வருவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவை மறைந்து முகத்தை பளிச்சென்று இருக்க உதவுகிறது.
வீக்கம் வலி குறைய:
நம்முடைய உடலில் கை, கால், மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் ஏதேனும் காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு பூலாங்கிழங்கு மிகவும் உதவியளிக்கிறது. அதாவது அடிபட்ட இடத்தில் வெள்ளை மஞ்சளை நன்றாக பேஸ்ட் போல செய்து அப்ளை செய்தால் போதும் வீக்கம் மற்றும் வலி குறைந்து விடும்.
மாதவிடாய் பிரச்சனை தீர்வு:
பெண்கள் பூலாங்கிழங்கினை பயன்படுத்தி தேநீர் போல் வைத்து சரியான அளவில் குடிப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் கட்டிகள் ஆகியவை சரி ஆகிவிடும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள் |
குழந்தை சரும பராமரிப்பு:
பூலாங்கிழங்கினை பொடியாக செய்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்த கொள்ள வேண்டும். அதன் பிறகு குழந்தையினை வழக்கம் போல குளிக்க வைத்து பிறகு இந்த வெள்ளை மஞ்சள் பேஸ்டினை உடலில் தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் உடல் மற்றும் சருமம் பளிச்சென்று மாறிவிடும் மற்றும் தேவையில்லாத முடிகளும் நீங்கி விடும்.
நுரையீரல் பிரச்சனை தீர:
இத்தகைய கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனை என இவற்றை எல்லாம் குணப்படுத்து உதவுகிறது.
மேலும் இதனை நாம் தேநீராக எடுத்துக்கொள்வதன் மூலம் அஜீரண கோளாறு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் குணமாகிவிடுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |