பூனை மீசை மூலிகை பயன்கள் பற்றி தெரியுமா.?

Advertisement

Poonai Meesai Benefits in Tamil

பூனை  மீசை நன்மைகள் என்றவுடன் பூனையோட மீசையான்னு நீங்க கேள்வி கேட்கத்தோணும். பூனை மீசைங்கிறது ஒரு மூலிகையோட பேரு. பல பேருக்கு இந்த மூலிகையைப் பேரு  தெரியாது. இந்த மூலிகை மட்டுமில்லை நம் உடலிற்கு நன்மை தரும் பல மூலிகைகளை பற்றி யாரும் அறிந்திருப்பதில்லை.

சொல்லப்போனால் மூலிகை செடிகளே பெரும்பாலானவர்கள் வீட்டில் இல்லை. அவற்றை வளர்ப்பதற்கும் யாரும் விருப்பமும் அடைவதில்லை. அதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள நன்மைகள் பற்றி அறியாமல் இருப்பதால் தான். அதனால் தான் இந்த பதிவில் பூனை மீசை மூலிகை செடியில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

கிட்னி:

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே கிட்னியில் பல பிரச்சனைகளை சந்திகின்றனர். இந்த பிரச்சனைகளை சரி பண்றதுக்கு இந்த பூனை மீசை மூலிகை செடி உதவியா இருக்கும். இந்த மூலிகை செடிக்கு நமது சிறுநீரை அதிகமாக வெளியேற்றுவதற்கு உதவி செய்கிறது. அதுமட்டுமில்லமால் நம் உடலில்உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவி செய்கிறது. இப்படி வெளியேத்துவதால் நம் சிறுநீரங்களில் உள்ள பிரச்சனை சரியாகும்.

வீட்டில் சொடக்கு தக்காளி வளர்ப்பது எப்படி.?

சர்க்கரை பிரச்சனை: 

 பூனை மீசை செடியின் பயன்கள்

இந்த மூலிகை செடியானது சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியா இருக்கிறது.  மேலும் இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவியா இருக்கும்.

உடல் எடை:

இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் உடல் எடையும் ஒன்றாக இருக்கிறது. உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு பலவற்றை முயற்சி செய்வீர்கள். ஆனால் பெரிதாக ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்று கவலை அடைவீர்கள். ஆனால் இந்த மூலிகை செடியானது உடல் எடையை குறைக்கிறதுக்கு உதவியை இருக்கும்.

மூலிகை டீ தயாரிப்பது எப்படி.?

பூனை மீசை மூலிகை டீ

மூலிகை டீ தயார் செய்வதற்கு டீ மாதிரி கொதிக்க வைக்க தேவையில்லை. பாத்திரத்தில தண்ணி ஊத்தி கொதிக்க வைக்க வேண்டும். பின் இதில மீசை மூலிகை செடியை 2 கரண்டி அல்லது தேவைக்கேற்ப போட்டு 5 நிமிஷம் வச்சிருக்கணும். 5 நிமிஷம் கழிச்சு வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

உங்களால சக்கரை இல்லாம குடிக்க முடியலைன்னா சக்கரை, தேன், பனைவெல்லம் போன்றவை சேர்த்து கலந்து விட்டு குடிக்கலாம்.

குறிப்பு:

எந்த மூலிகை செடியை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி மருத்துவர் ஆலோனை பெற்ற பிறகு தான் குடிக்க வேண்டும்.

பாலக் கீரை நன்மைகள்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement