வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புளிச்சக்கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா..?

Updated On: July 11, 2023 9:46 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 புளிச்ச கீரை நன்மைகள்

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் கீரை வகைகளை தான் அதிகமாக சாப்பிட சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் அரைக் கீரை, முருங்கைக்கீரை, தண்டு கீரை, ஊசிப்பாலை கீரை மற்றும் புளிச்சக் கீரை என எண்ணற்ற வகைகள் கீரையில் உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கீரையில் எப்படி இவ்வளவு வகைகள் இருக்கிறதோ அதே போல் அத்தகைய கீரையில் எண்ணற்ற வகைகளும் இருக்கிறது. ஆனால் சிலருக்கு இத்தகைய சத்துக்கள் மற்றும் பயன்கள் என்னென்ன என்று தெரிவது இல்லை. எனவே இன்று புளிச்சக் கீரையில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

40 கீரை வகைகள் அதன் பயன்களும்

புளிச்ச கீரையில் உள்ள சத்துக்கள்:

புளிச்சக் கீரையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளது. மேலும் பல வகையான சத்துக்களை கொண்டுள்ள புளிச்சக் கீரையினை நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

Pulicha Keerai Benefits:

இரத்த சோகை குறைய:

இரத்த சோகை குறைய

நம்முடைய உடலில் இரத்த குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த சோகை இருந்தாலோ நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ முடியாது. அந்த வகையில் நம்முடைய உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் குறைவாக இருக்கும் போது நமக்கு அனிமியா என்று சொல்லப்படும் இரத்த சோகை பிரச்சனை வருகிறது.

அதனால் இரத்த சோகை உள்ளவர்கள் புளிச்ச கீரையினை சாப்பிடுவதன் மூலம் அது குணமாகிவிடும்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்:

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

புளிச்சக் கீரையினை நாம் உணவுடன் எடுத்துக்கொள்வதன் மூலம் இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவினை சரியாக வைக்க செய்கிறது.

பெண்களுக்கு அடி வயிறு வலி:

பெண்களுக்கு அடி வயிறு வலி

மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அடிவயிற்று வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே அத்தகைய நேரங்களில் பெண்கள் புளிச்சக் கீரையினை சாப்பிடுவதன் மூலம் இந்த வலிகள் இல்லாமல் இருக்க முடியும்.

Murungai Keerai Powder Benefits in Tamil

கேன்சர் வராமல் தடுக்க:

கேன்சர் வராமல் தடுக்க

புற்றுநோய் என்பது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு நோயாக உள்ளது. ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் சரியான அளவில் புளிச்சக் கீரை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழித்து கேன்சர் வராமல் இருக்க உதவுகிறது.

குடல் புண் ஆற உணவு:

குடல் புண் ஆற
 

குடல் புண் என்பது நாம் அனைவரும் சரியாக சாப்பிடாமல் இருப்பதானாலும், வேறு ஏதேனும் புண்கள் ஏற்பட்டு இருந்தாலும் வரக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே குடல் புண் உள்ளவர்கள் புளிச்சக் கீரையினை உணவுடன் எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவில் புண் ஆறிவிடும்.

முருங்கை கீரை நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now