ஒருவருக்கு பக்கவாதம் வர இதெல்லாம் தான் காரணமா என்ன சொல்றீங்க..!

Advertisement

Reason for Stroke in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் என்ன தான் சத்துக்கள் நிறைந்த உணவு என நினைத்து வாங்கி சாப்பிட்டாலும் கூட நமது உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதே சாத்தியமான ஒரு உண்மை. இதனுடைய பக்க விளைவுகளாக இளம் வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. அதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளும் போது அவை அனைத்தும் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த செயல்களவே உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் பக்க விளைவுகள் வர காரணம் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பக்கவாதம் வர காரணம் என்ன 

உடற்பயிற்சி செய்யாமை:

உடற்பயிற்சி செய்யாமை

அதிக உடல் எடையும் பக்க வாதம் வர ஒரு காரணமாக அமைகிறது. ஆகையால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் குறைவாக உள்ளவர்கள் என அனைவரும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஏனென்றால் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

எனவே சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருத்தலும் இதற்கான காரணமாக அமைகிறது.

அதிக அளவு உப்பு:

அதிக அளவு உப்பு

பொதுவாக பக்கவாதத்திற்கு அதிக அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் ஒரு காரணமாக அமைகிறது. ஆகவே சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 உப்பை எடுத்துக்கொண்டாலே போதுமானது. இதற்கு மாறாக உப்பை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி. யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள்

தூக்கமின்மை:

தூக்கமின்மை

ஒரு மனிதனுக்கு உழைப்பு என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறததோ அதே அளவிற்கு அவர்களுக்கு தூக்கமும் மிகவும் முக்கியம். ஆகையால் தினமும் சரியான தூக்கத்தினை தூங்காமல் இருப்பதும் பக்கவாதத்திற்கான ஒரு காரணமாக அமைகிறது.

சத்து குறைபாடு:

சத்து குறைபாடு

நமது உடல் ஆனது ஆற்றலுடனும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருந்தால் மட்டுமே சுறு சுறுப்பாக இருக்கும். இவ்வாறு இருக்க வேண்டும் என்றால் அதற்கு கால்சியம், பொட்டாசியம், இரும்புசத்து என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் அவசியமானது.

ஆனால் நாம் அனைவரும் பெரும்பாலும் கடைகளில் விற்கும் சாப்பாட்டினை சாப்பிடுவதில் இதுபோன்ற சத்துக்கள் ஆனது இருப்பது இல்லை. ஆகையால் சத்துக்கள் குறைபாடு மற்றும் ஹோட்டல் உணவு என இதுபோன்ற காரணங்களினாலும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை:

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை

தினமும் எந்த விதமான வேலையும் செய்யாமல் எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருப்பதும் பக்க வாதத்திற்கான காரணமாக அமைகிறது. ஏனென்றால் 6 மணிநேரம் நிற்பதால் ஒரு மனிதனின் உடலில் ஒரு நாளில் 45 கலோரி எரிக்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கையினை வாழுவதும் பக்க வாதத்திற்கான காரணமா அமையும்.

எனவே நமது மூளைக்கு செல்லும் இரத்தம் ஆனது தடைபடும் போது மூளையின் செல் தசைகள் பாதிக்கப்பட்டு பின்பு ஒரு சில பகுதிகளும் பாதிக்கப்டுகிறது. இவ்வாறு பாதிப்பு ஏற்படும் பகுத்திக்கு ஏற்றவாறு பக்க வாதம் நமது உடல் உறுப்புகளில் வருகிறது.

மேலும் பக்க வாதம் ஏற்பட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் என இவை இரண்டும் காரணமாக இருந்தாலும் மேலே சொல்லப்பட்டுள்ளவையும் சில காரணமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது என்ன நடக்கும் தெரியுமா 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement