கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்
உடல் பருமன் என்பது ஒரு மருத்துவ நோய், அதிகப்படியான கொழுப்பு ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு உருவாகும்போது உடல் பருமன் அதிகரிக்கிறது. ஒரு நபரின் உடல் நிறை குறியீடு எண் (BMI) என்பது அதிக எடையை மதிப்பிடுவதற்கான ஒரு கருவியாகும். BMI என்பது ஒருவரின் வயதுக்கு ஏற்ற உயரம், எடை இவற்றிக்கு இடையேயான அளவுகளை குறிப்பது. BMI, 30 -க்கு அதிகமாக இருந்தால் அவர் உடல் பருமன் கொண்டவர் என வரையறுக்கப்படுகிறது. இவற்றில் இருந்து தன்னை காத்து கொள்ள நாம் உட்கொள்ளும் உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும்.
உலகம் முழுவதுமே இன்று Obesity எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இன்றைய இளைய தலைமுறைகளாகட்டும், பெரியவர்களாகட்டும் அனைவரும் தங்களது எடையை குறைக்க அதிகம் பாடுபடுகின்றனர். அதுவும் வயிற்று பகுதியில் உள்ள அதிகபடியான கொழுப்பை (தொப்பை) குறைப்பதற்காக நீங்கள் மருந்தகம் நோக்கி போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அதாவது நமது வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கலாம். வாருங்கள் அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்.
உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க வீட்டின் சமயலறையில் உள்ள கொத்தமல்லி போதுமானது. கொத்தமல்லியை நமது உணவில் சரியான அளவு பயன்படுத்தினால் போதுமானது மிக சீக்கிரமாகவே உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கலாம்.
கொத்தமல்லி உணவில் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக அதனை பயன்படுத்தும் முறையினை மாற்றினால் போதும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கொத்தமல்லியை தூளாக, விதைகளாக இலையாக இப்படி பல விதமாக நாம் பயன்படுத்துவோம்.
கொத்தமல்லி விதைகளை பயன்படுத்தி நாம் juices தயாரித்து பயன்படுத்தும் போது, நமது உடலில் உள்ள கொழுப்பு குறைய உதவும்.
பொதுவாகவே அதிக தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. அதனுடன் கொத்தமல்லி விதைகள் சேர்த்து பயன்படுத்தும் போது அது மேலும் நமக்கு அதிக பயன்களை தரும்.
கொத்தமல்லி ஜூஸ் எப்படி செய்வது ?
1 கப் தண்ணீரில், 5 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போட்டு நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதித்த உடன் அதனை வடிகட்டி அதில் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உங்களின் கொழுப்பு குறையும். கசப்பு சுவைக்காக மட்டும் தான் நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு சுவை தேவையில்லாத பட்சத்தில் நாட்டுசர்க்கரை தேவையில்லை.
கொத்தமல்லி ஆரோக்கிய நலன்கள்:
கோடை வெயிலுக்கு இந்த கொத்தமல்லி ஜூஸ் சிறந்தது. இந்த கொத்தமல்லி ஜூஸ் உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்க கூடியது. இதில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொத்தமல்லி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொத்தமல்லியை துவையலாக சாப்பிடலாம். கொத்தமல்லி வாயு தொல்லை, அஜீரணம் தொல்லைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கொத்தமல்லி மிகவும் சிறந்த தீர்வாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |