வலது பக்கம் வயிறு வலித்தால் என்ன பிரச்சனை ஏற்படும்..!

stomach pain right side in tamil

வலது பக்க கீழ் வயிறு வலி காரணம் – Right Side Stomach Pain in Tamil

பொதுவாக நமக்கு வயிறு வலிக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அப்படி என்ன காரணம் இருக்க போகிறது என்று நினைப்பீர்கள். பெண்கள் முதல் ஆண்கள் வரை சில நேரங்களில் வயிறு வலிக்கும். இதற்கு காரணம் அவரவர் உடல் நிலையை பொறுத்து மாறுபடும். அதேபோல் இடது பக்க வயிறு வலி என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அப்படி என்ன காரணம் என்றால், அதனை தெரிந்துகொள்ள இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளவும்.

Right Side Stomach Pain in Tamil:

வயிறு எப்போதும் அதே மாதிரி தொடர்ந்து வலித்தால் உடனே மருத்துவமனை சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏனென்றால் சிறிய உடல்நல குறைவு தான் பெரிய பிரச்சனையை வரவைக்கும். ஆகவே உடனே மருத்துவமனை செல்வது நல்லது.

இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் இதய நோய் ஏற்படுமா

குடல்வால் அழற்சி அறிகுறிகள்:

இந்த குடவால் அழற்சி அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் வலது பக்கம் வலியை  ஏற்படுத்தும். அதேபோல் அடி வயிற்றில் அழற்சி ஏற்பட்டு, சீழ் நிறைந்திருக்கும்.  அப்போது இது மாதிரியான வலி ஏற்படுத்தும். முதலில் வயிறு நடுப்பகுதியில் வலி வரவழைத்து அதன் பின்பு மெதுவாக வலதுபக்க வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இதற்கு அறிகுறிகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், குமட்டல் மற்றும் வாந்தி என இதுபோன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

அஜீரண கோளாறு அறிகுறிகள்:

அடி வயிற்றில் வலதுபக்கம் வலியுடன் கூடிய நெஞ்செரிச்சல் மற்றும் உப்புசம்  ஏற்பட்டால், அஜீரண கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இது மாதிரி அடிக்கடி ஏற்படாமல் இருக்க குளிர்பானங்கள், செரிமானம் ஆகாத உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்போதும் போல் அஜீரண கோளாறுகள் இருந்தால் அவர்களுக்கு விரைவில் குணம் ஆகும். ஆனால் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீரக தொற்று அறிகுறி:

சிறுநீரக கற்கள் இருந்தால் அவர்களுக்கு வலது புற பக்கவாட்டில் அடி வயிற்றை வலிக்கும். அதிகமான நேரத்தில் வலிகள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் சில நேரத்தில் வலி எடுக்க ஆரம்பித்தால் அதிக வலியை ஏற்படுத்த கூடும். குமட்டல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, சிறுநீரில் இரத்தம், துர்நாற்றமிக்க சிறுநீர் போன்றவை சிறுநீரக தொற்றின் பிற அறிகுறிகளாகும்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:

சிறுநீரக கற்கள் வருவதற்கு காரணம் தாதுக்கள் மற்றும் உப்புக்களின் பெருக்கத்தினால் உருவாவது தான். இதற்கான அறிகுறி என்னவென்றால் வழக்கமான சிறுநீரக நிறத்தை விட அடர்த்தியாக இருக்கும். இது கற்களின் அளவை பொறுத்து மாறுபடும். இது சத்துகள் இல்லதாத உணவுகளால் உருவாகும்.

இதனை தவிர நிறைய அறிகுறிகள் உள்ளது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி, ஹெர்னியா போன்ற அறிகுறிகளும் வருவதற்கு வாய்ப்பு  உள்ளது. ஆகவே உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளவும்  👉👉   இதய நோயின் அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil