2 நாட்களில் சளி இருமலை சரி செய்யும் மூலிகை கஷாயம்

Advertisement

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கிறது. குளிர்காலம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என அடுத்தடுத்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இதனை சரி செய்வதற்காக மருத்துவரிடம் சென்று காண்பிப்பார்கள். அப்படி காண்பித்தாலும் சளி இருமல் சரி ஆகாது. இதனால் வீட்டில் பெரியவர்கள் யாரும் இருந்தால் கஷாயம் வைத்து குடி என்று கூறுவார்கள். அதனை நாம் கேட்க மாட்டோம். மாத்திரை போட்டே சரியாகவில்லை கஷாயம் குடிப்பதால் சரி ஆக போகிறதா.! என்று அலட்சியமாக கேட்போம். அந்த கஷாயத்தின் அருமை தெரியாமல் அதனை குடிக்க மாட்டுகிறோம். அதனால் தான் இந்த பதிவில் சளி இருமலை சரி செய்ய கஷாயத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. சித்தரத்தை பொடி – 1 தேக்கரண்டி
  2. திப்பிலி பொடி – அரை தேக்கரண்டி
  3. மிளகு பொடி – 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  5. ஓமம் – 1 தேக்கரண்டி
  6. துளசி – ஒரு கைப்பிடியளவு
  7. கற்பூரவல்லி இலை- 2 கைப்பிடியளவு

துளசி விதை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்.!

கஷாயம் செய்முறை:

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

 

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில்  இரண்டு கைப்பிடி கற்பூரவல்லி இலை, ஒரு கைப்பிடி துளசி, சித்தரத்தை பொடி, திப்பிலி பொடி, மிளகு, மஞ்சள் தூள், ஓமம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.

பின் அதனுடன் 1/2 லிட்டர் தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இந்த கஷாயம் ஆனது நன்றாக கொதித்து சேர்த்த தண்ணீரை விட பாதியளவு வரும் வரை கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்த பிறகு தண்ணீராக வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கஷாயத்துடன் பால் சிறிதளவு, பனக்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். பனக்கற்கண்டு இல்லையென்றால் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து குடிக்கலாம்.

இந்த கஷாயத்தை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மூன்று வேலையும் குடித்து வந்தால் இருமல், சளி, உடல் வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

இந்த கஷாயத்தில் சேர்க்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் உடையது. அதிலும் முக்கியமாக துளசி, கற்பூரவல்லி போன்றவை சளி மற்றும் இருமல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க என்னஎன்னாவோ Try பண்ணியிருப்பிங்க. ஆன இத ட்ரை பண்ணிங்களா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement