சாரா பருப்பு பயன்கள்
நம்முடைய வீட்டில் பருப்பு வகைகளை கொண்டு அதிகப்படியான உணவுகளை சமைப்பார்கள். அதிலும் குறிப்பாக துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய பருப்புகள் தான் நம்முடைய வீட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகைய பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போலவே மற்றொரு பருப்பு வகைகளிலும் உள்ளது. அந்த பருப்பு வேறு ஒன்றும் இல்லை சாரா பருப்பு தான். சாரா பருப்பு என்பது என்ன என்று நிறைய நபருக்கு தெரியாமல் உள்ளது. ஆகவே இன்று சாரா பருப்பில் உள்ள நன்மைகள் என்ன என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ரோஜா இதழில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்
சாரா பருப்பு சத்துக்கள் பெயர்கள்:
சாரா பருப்பில் வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, நியாசின், ஸ்டார்ச், புரதம் மற்றும் கொழுப்புசத்து என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் அடங்கி உள்ளது.
Sara Paruppu Benefits:
வயிறு பிரச்சனை நீங்க:
சாரா பருப்பில் நார்சத்து இருப்பதால் இதனை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் நமக்கு மலச்சிக்கல் வராமல் இருக்க செய்கிறது. அதேபோல் செரிமான கோளாறு மற்றும் வயிறு தொடர்பான மற்ற பிரச்சனைகள் வருவதையும் தடுக்கிறது. ஆகவே சாரா பருப்பினை நாம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
சோர்வு நீங்க:
இத்தகைய பருப்பில் நார்சத்து, குறைந்த அளவு கலோரிகள் மற்றும் புரதங்கள் இருப்பதால் இதனை நாம் உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் சோர்வு நீங்கி ஆற்றலுடனும், சுறுசுறுப்புடனும் இருக்க உதவுகிறது.
உடல் எடை குறைய:
சாரா பருப்பினை சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் மற்றும் புரதங்கள், நார்சத்து ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களும் நமக்கு அடிக்கடி பசியினை தூண்டுவதை நிறுத்தி உடல் எடையினை குறைப்பதற்கு சிறந்த ஒன்றாக உள்ளது.
சர்க்கரை நோய் குணமாக:
அதுமட்டும் இல்லாமல் இதில் காணப்படும் சத்துக்கள் ஆனது உடலில் நீரிழிவு நோய் இருப்பதை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இவ்வாறு செய்வதன் சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக காணப்படுவது இல்லை.
மேலும் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மன அழுத்தம் குறைய:
இந்த பருப்பினை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் வராமல் தடுக்க முடியும். ஏனென்றால் இதில் மெத்தனாலிக் பண்புகள் இருப்பதால் இது நமது உடலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணாமாக இருக்கும் காரணிகளை காரணிகளை எதிர்க்கிறது.
மேலும் சாரா பருப்பு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அழித்தலும் கூட இதனை நாம் சரியான அளவில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே எதையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.
பப்பாளி இலை நன்மைகள் பற்றிய உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |