தோல் வலி வர காரணம்
நமது வேலையை பொறுத்து உடல் வலி ஏற்படுவது இயற்கையானது. ஆனால் நெஞ்சு வலி, வயிற்று வலி, கால் வலி போன்றவை வருகின்றது என்றால் கவனிக்க வேண்டும். ஒரு தடவை வந்தால் பரவாயில்லை, அதுவே அடிக்கடி ஒரே இடத்தில் வலிகள் வருகின்றது என்றால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய தோல் வலி வருவதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
தோள்பட்டை வலி காரணங்கள்
சுழலும் சுற்றுப்பட்டை:
சுழலும் சுற்றுப்பட்டை என்பது தோள்ப்பட்டையை சுற்றி இருக்கும், நான்கு தசை நார்கள் இருக்கும் இடமாகும். இந்த சுற்றுப்பட்டையானது தேய்மானம் அடைந்திருந்தால் தோல் பட்டை வலி ஏற்படும்.
ஆஸ்டியோபைட்டுகள்” என்றும் அழைக்கப்படும், இந்த சிறிய, மென்மையான எலும்புத் துண்டுகள் உங்கள் சுழலும் சுற்றுப்பட்டையில் தேய்ந்து, உங்கள் தோள்பட்டை நகர்வதைத் தடுக்கின்றன. அவை தசைநாண் அழற்சி அல்லது சுழற்சி சுற்றுப்பட்டை கிழிவுக்கு வழிவகுக்கும்.
இரவு சாப்பாட்டில் இந்த 5 வகையான உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள் |
எலும்பு முறிவு:
விபத்தின் காரணமாக தோல் பட்டையில் அடிபட்டிருந்தால் அதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும். இல்லையென்றால் வயதான பிறகு தோல் பட்டை எலும்பு தேய்மானம் அடைந்து தோல் வலி பிர்ச்னை ஏற்படும்.
சிதைவு மூட்டு நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது கீல்வாதத்தின் மிகவும் பொதுவான வடிவமாகும் . இது உங்கள் தோள்கள் உட்பட எந்த மூட்டுகளையும் பாதிக்கலாம். எலும்புகளுக்கு இடையில் உள்ள குருத்தெலும்பு உடைந்து, அவை ஒன்றாக உராய்கின்றன. இது வலி மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் கூட தோள்பட்டை வலி ஏற்படும்.
மாரடைப்பு:
தோள்பட்டை வலி இருந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மாரடைப்பு பிரச்சனையாக இருக்கும்.
பித்தப்பை, கல்லீரல் பிரச்சனை இருந்தால் கூட தோல் பட்டை வலி ஏற்படும்.
தூங்கும் முறை:
நீங்கள் இரவில் தூங்கும் போது ஒரே பக்கத்தில் தூங்கினால் கூட தோல்பட்டை வலி ஏற்படும். அதனால் இரவு தூங்கும் போது ஒரே பக்கத்தில் சாய்ந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
வேலை:
ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்க கூடிய வேலையாக இருந்தால் தோள்பட்டை வலி ஏற்படும். அதனால் நீங்கள் அடிக்கடி பிரேக் எடுத்து கையை அசைக்க வேண்டும். மேலும் வீட்டில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |