Side Effects of Eating Curd Daily in Tamil
கோடை காலத்தில் சூட்டை தணிக்கும் ஒரு பானமாக தயிர் உள்ளது, என நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதில் பல்வேறு பக்க விளைவுகளும் உள்ளது. தயிர் புளிப்பு சுவையை கொண்டது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் இன்றைய பதிவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தயிரை சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள்:
கோடை காலத்தில் நமது உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள தயிர் உதவுகிறது. ஆனால் அதை விட தயிருக்கு உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளது. தயிரை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக பண்டைய கால மருத்துவர்கள் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஒருவருடைய உடலின் ஆரோக்கியத்தை நிலையை பொறுத்து பித்தம், வாதம், கபம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் என கூறுகிறார்கள்.
மீன் உணவுகளுடன் ஏன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க..!
தயிர் ஏன் உடல் சூட்டை அதிகரிக்கும்:
தயிரை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தின் படி தயிரில் உள்ள புளிப்பு சுவை, சூட்டை அதிகரித்து செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகும் என கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தயிரில் பித்தமும், கபமும், குறைவாக இருக்கிறது. எனவே தயிர் சாப்பிடும் நபராக இருந்தால் கவனித்து சாப்பிடுவது அவசியமாகும். தயிரை அதிகம் சாப்பிடுவதன் மூலம் பருக்கள் மற்றும் பல விதமான பிரச்சனைகளும் வர தொடங்கும். அதனால் தயிரை அதிகம் சாப்பிடாமல் சரியான முறையில் சாப்பிடும் போது எந்த விதமான பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.
தயிரை எப்படி சாப்பிடுவது :
கோடை காலத்தில் தயிரை சாப்பிடுவதால் உடல் சூடாகும் நிலை ஏற்படுவதால் மோரை சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமில்லாமல் மோரில் உப்பு, மிளகு, சீரகம், இந்த மூன்று பொருளையும் சேர்த்து குடிப்பதால் வெப்பத்தின் அளவை சமநிலைப்படுத்தி உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை தருகிறது. கோடை காலத்தில் தயிரை சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள், தயிரில் தண்ணீர் கலந்து மோராக குடிக்கலாம்.
உங்கள் வீட்டில் குக்கர் இருந்தால் போதும் 1/2மணிநேரத்தில் கெட்டி தயிர் தயார் செய்யலாம்..!
தயிர் சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள்:
- தினசரி தயிரை சாப்பிடும் நபருக்கு மலச்சிக்கல் மற்றும் அதிகம் தாகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- தினசரி தயிரை சாப்பிடும் நபருக்கு ஒற்றை தலைவலி எற்படும்.
தயிரை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது :
- நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது.
- ஏதேனும் உடல் நல குறைபாட்டால் மருத்துவமனையில் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது.
- அறுவை சிகிக்சை செய்தவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது.
- மூட்டு வலி இருப்பவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |