பலா விதைகளின் தீமைகள்
பலாப்பழம், இது இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவாக காணப்படுகிறது. பலாப்பழம் அதன் சிறந்த சுவைக்காக பல இந்திய உணவுகளில் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. பலாப்பழத்தை உணவில் உட்கொள்வதைத் தவிர, மக்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலாப்பழத்தின் விதைகளை சாப்பிடுகிறார்கள். பலாப்பழ விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், பலா விதைகள் நச்சுத்தன்மையுடையதாகவும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். மனிதர்களின் சீரற்ற உடல் ஆரோக்கியத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பலாப்பழ விதைகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்….
Side Effects of Jackfruit Seeds
- பலாப்பழ விதைகளில் டானின்கள் மற்றும் ட்ரிப்சின் இன்ஹிபிட்டர்கள் போன்ற ஆன்டிநியூட்ரியண்ட்கள் இருப்பதால், அவை உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.
- பலாப்பழ விதைகளில் டிரிப்சின் என்னும் வேதிப்பொருள் இருப்பதால் நீங்கள் பலாப்பழம் அதிக அளவு உட்கொண்டால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- பலாக் கொட்டைகள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம், இந்த ஒவ்வாமையை உடனே கவனிக்கப்படாவிட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
- பலா விதைகள் இரத்தம் உறைதலை தாமதப்படுத்தும். விபத்துகளின் போது அதிக இரத்தபோக்குக்கு வழிவகுக்கும்.
நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
உணவில் சேர்த்துக்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டியவை
பலா விதைகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனை அதிகம் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் பலா விதைகளை உட்கொள்ள விரும்பினால், கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்:
- பலா விதைகளை பச்சையாக உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது. ஏனெனில் பலா விதையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
- பலாக் கொட்டைகளை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது நல்லது.
- நீங்கள் பயன்படுத்தும் விதைகள் புதியதாகவும், பாதுகாப்பான முறையில் பதப்படுத்தப்பட்டதாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பலா மரத்தில் காய் காய்க்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |