வெறும் அரிசி சாப்பிடுபவரா நீங்கள்.! அப்போ இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா..?

Advertisement

Side Effects of Eating Raw Rice in Tamil | Arisi Sapiduvathal Erpadum Theemaigal in Tamil 

நம்மில் பலபேர்  வீட்டில் இருக்கும் போது அரிசியை வெறுமனே சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த பழக்கம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கும். மளிகை கடையில் இருப்பவர்கள் அடிக்கடி அரிசியை எடுத்து வாயில் போட்டு கொண்டே இருப்பார்கள். இப்பழக்கத்தை சிலரால் நிறுத்தவே முடியாது. அந்த அளவிற்கு அரிசிக்கு அடிமையாகி இருப்பார்கள். எனவே அப்படி அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்காக தான் இப்பதிவு. அதாவது வெறும் அரிசியை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை படித்தாவது அரிசி சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

What is The Effects of Eating Raw Rice in Tamil:

 what is the effects of eating raw rice in tamil

இரத்தசோகை நோய்:

அரிசியை பச்சையாக சாப்பிடுவதால் இரத்தசோகை நோய் வரக்கூடும். அதாவது அரிசியை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படுகிறது.

வயிற்று கோளாறுகள்:

 what happens when we eat raw rice daily in tamil

வேகவைக்காத அரிசியை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். மேலும், சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் பசியின்மை ஏற்படும். மேலும் அரிசி, பேசில்லஸ் சீரஸ் எனும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா நம் உடலினுள் சென்று வயிற்றில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் முழுமையாக அளிக்கிறது.இதனால் அஜீரண கோளாறு, வாந்தி, குமட்டல் போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரக்கூடும்.

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா.?

குடல் புற்றுநோய்:

வேகவைக்காத அரிசியில் லெசித்தின் என்ற பொருள் உள்ளது. இது நம் வயிற்றுக்குள் செல்லும் போது உடலில் உள்ள செரிமான செல்களை பாதிக்கிறது. இது நம் உடலில்  அதிகமாக சேரும்போது குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

பற்களை பாதிக்கும்:

 arisi sapiduvathal erpadum theemaigal tamil

அரிசியில் மாவுப்பொருள் அதிகமாக உள்ளது. இதனை நாம் அடிக்கடி சாப்பிடும் போது பற்களில் ஒட்டிக்கொண்டு நம் பற்களில் உள்ள கிருமிகளுக்கு உணவாக மாறிவிடுகிறது. இது நாளடைவில் பற்சொத்தை, ஈறுகளில் வீக்கம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்தி பல்லை நீக்கும் அளவிற்கு கொண்டு வந்து விடும்.

கர்ப்பிணிகளுக்கு தீங்கானது:

 what is the side effects of eating raw rice during pregnancy in tamil

வெறும் அரிசியை குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவே கூடாது. ஏனென்றால் வேகவைக்காத அரிசியை கர்ப்பிணிகள் சாப்பிடும்போது அது அவர்களுக்கு மட்டுமில்லாமல் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது குழந்தைக்கு இரத்தசோகை நோய் ஏற்படும். இதனால் குழந்தை ஊட்டசத்து குறைபாடுடன் பிறக்கும். எனவே, கர்ப்பிணி பெண்கள் இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குதிரைவாலி அரிசியை சமைப்பதற்கு முன் அதனை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement