கொசு விரட்டும் லிக்யூடுகளை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Side Effects of Mosquito Repellent Liquids

பெரும்பாலான வீடுகளில் கொசு விரட்டும் லிக்யூடுகளை பயன்படுத்தி வருவார்கள். ஆனால், அவர்களுக்கு கொசு விரட்டும் லிக்யூடுகளை பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது தெரிவதில்லை. ஆகையால், கொசு விரட்டும் லிக்யூடுகளை பயன்படுத்துவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை இப்பதிவின் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நம் பயன்படுத்தும் கொசு விரட்டும் லிக்யூடுகள் கொசுக்களை 100% கொல்லுகிறதோ அதே அளவிற்கு மனிதனுக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு அதில் கெமிக்கல் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற  கொசு விரட்டும் லிக்யூடுகளை தயாரிக்கும் நிறுவங்களே லிக்யூடு பேக்கில் அதனினின் தீமை பற்றி பதிவிட்டு உள்ளார்கள். ஆகையால், கொசு விரட்டும் லிக்யூடுகள் பயன்படுத்துவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

What are The Side Effects of Liquid Mosquito Repellent in Tamil:

இந்த கொசு விரட்டிகளில் பெரும்பாலானவை பைரெத்ராய்டு அல்லது ப்ராலெத்ரின் போன்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கலால் தயாரிக்கப்படுகிறது. இதனால், கொசுக்களை 100% கொள்ளுவதோடு மனிதர்களுக்கும் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி..?

சுவாச பிரச்சனைகள்:

 side effects of mosquito repellent liquids in tamil

கொசு விரட்டிகளில் இருந்து வெளியேறும் கெமிக்கல்கள் கலந்த வாசனையை சுவாசிப்பதன் மூலம் சுவாச கோளாறுகள் ஏற்படும். அதாவது, கொசு விரட்டும் லிக்யூடுகள் மூச்சு திணறல், நெஞ்செரிச்சல் போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்பட  காரணமாக இருக்கிறது. மேலும், ஒரு சிலருக்கு இதன் வாசனை தலைசுற்றல், மயக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது.

தோல் அழற்சி:

 disadvantages of mosquito repellent in tamil

கொசு விரட்டும் லிக்யூடுகளை பயன்படுத்துவதன் மூலம் தோல் எரிச்சல், தோல் ஒவ்வாமை, வீக்கம், சொறி போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகையால், இயற்கையான கொசு விரட்டும் முறைகளை பயன்படுத்துவது நல்லது.

கண்களுக்கு பாதிப்பு:

கொசு விரட்டிகளில் இருந்து வெளியேறும் கெமிக்கல்கள் கலந்த திரவம் தோல்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதோடு கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாளடைவில் கண்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

நெகிழிப் பொருட்கள் தீமைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement