சிறுகுறிஞ்சான் பொடி நன்மைகள்

Advertisement

சிறுகுறிஞ்சான் பயன்கள் | Sirukurinjan Powder Benefits in Tamil

வாசகர்கள் அனைவருக்கும்  வணக்கம். இப்பதிவில் சிறுகுறிஞ்சான் பொடி நன்மைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம் முன்னோர்களின் காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல்நல குறைபாடு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு,வீட்டில் இருக்கும் மூலிகை செடிகளை தான் பயன்படுத்தினர். இந்த மூலிகை செடி பயன்படுத்துவதால் எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டாலும் ஆங்கில மருந்துகளை தான் பயன்படுத்துகின்றனர்.

அப்படியே வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலிகை செடியை பயன்படுத்து என்றாலும் கேட்பதில்லை. அதெல்லாம் கேட்காது என்று சொல்கிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சிறுகுறிஞ்சான் பொடி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

சிறுகுறிஞ்சான் நன்மைகள்:

சர்க்கரை நோய்:

சிறுகுறிஞ்சான் நன்மைகள்

சர்க்கரை நோயாளி 1 மற்றும் 2 ஆம் வகை உள்ளவர்கள் இரத்த சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு சிறுகுறிஞ்சான் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு சிறுகுறிஞ்சான் இலையை பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியிலிருந்து 2 கிராம் அல்லது 3 கிராம் எடுத்து மூன்று வேலையும் சாப்பிட வேண்டும். 5 மாதம் முதல் 6 மாதம் வரை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் சிறுநீரில் உள்ள சர்க்கரையை அகற்றும்.

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!

மாதவிடாய் பிரச்சனை:

மாதவிடாய் பிரச்சனை தீர

மாதவிடாய் பிரச்சனை சரியாக வர மாட்டிகிறது என்பவர்களுக்கு சிறுகுறிஞ்சான் இலையை ஒரு கைப்பிடி எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை தினமும் காலை வேலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் பிரச்சனை சரியாகிவிடும்.

சுவாச பிரச்சனை:

சுவாச பிரச்சனை தீர்வு

சுவாச பிரச்சனை இருப்பவர்கள் சிறுகுறிஞ்சான் பொடி சிறிதளவு, சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பொடியை 7 நாட்கள் காலை மாற்றம் மாலை வேலைகளில் சாப்பிடுவதன் மூலம் சுவாச பிரச்சனை சரி செய்யலாம்.

காய்ச்சல் சரியாக:

காய்ச்சல் சரியாக

காய்ச்சலை சரி செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறுகுறிஞ்சான் இலை 10, 5 மிளகு, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை 1/2 கிளாஸ் குடிப்பதன் மூலம் காய்ச்சலை சரி செய்யலாம்.

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

பித்தம் சரி செய்வது எப்படி.?

பித்தம் சரி செய்வது எப்படி

பெரும்பாலானவர்களுக்கு பித்த பிரச்சனை இருக்கிறது. இதனை சரி செய்வதற்கு சிறுகுறிஞ்சான் இலையை காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து 3 நாட்களுக்கு குடித்து வர பித்தத்தை சரி செய்யும்.

பசியின்மை நீங்க:

பசியின்மை நீங்க

பசி இருந்தால் தான் நாம் உணவுகளை நன்றாக எடுத்து கொள்ள முடியும். அது போல பசித்த பிறகு தான் உணவை சாப்பிட வேண்டும். ஒரு சிலருக்கு பசியே இருக்காது இதற்க்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி  சிறுகுறிஞ்சான் இலைகள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க விடவும். 1/ 2 கிளாசாக வந்தவுடன் அதனை தினமும் குடித்த வர வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement