Siruneeraga Kal Karaya Maruthuvam in Tamil
நம் உடலில் சிறுநீரகம் என்பது மிகவும் முக்கியமான உறுப்பு. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் இயக்கங்களை சீராக்கி வருகிறது. இப்படி நம் உடல் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகம் முறையாக செயலபடாமல் இருந்தால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. சிறுநீரகம் முறையாக செயல்படாமல் இருக்கும்போது சிறுநீரகத்தில் உப்பு போன்ற துகள்கள் தேங்கி நாளடைவில் கற்களாக உருவாகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
இக்காலத்தில் சிறுநீரக கல் பிரச்சனையால் பலபேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சிறுநீரக கல்லை அகற்றுவதற்கான மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சிறுநீரக கல் மருத்துவம்:
பீன்ஸ்:
சிறுநீரக கல் பிரச்சனைக்கு பீன்ஸ் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். ஆகையால், சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இம்முறையை பயன்படுத்தி பயடையலாம். கால் கிலோ பீன்ஸை நன்றாக கழுவி துன்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்கவைத்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து குடித்து விடுங்கள். குடித்து 10 நிமிடம் கழித்து 2 லிட்டர் அளவிற்கு தண்ணீரை சிறிது நேரம் விட்டு விட்டு குடித்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கல் உடைந்து ஓன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்ளாக நீரில் வெளியாகிவிடும்.
சிறுநீரக கல் கரைய உடற்பயிற்சி..!
மூக்கிரட்டை பொடி:
மூக்கிரட்டை பொடியில் கஷாயம் செய்து 30 முதல் 40 மில்லி அளவிற்கு தினமும் குடிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைய தொடங்கும்.
கொள்ளு:
4 ஸ்பூன் கொள்ளுவை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து நான்கில் ஒரு பங்காக மாறும் வரை கொதிக்கவிட்டு குடித்து வர வேண்டும்.
துளசி:
துளசி சாறு 1 ஸ்பூன் மற்றும் தேன் 1 டீஸ்பூன் எடுத்து நன்கு கலந்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
வாழைத்தண்டு ஜூஸ்:
வாழைத்தண்டு ஜூஸ் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் சிறுநீரக கல் உடைந்து வெளிவந்துவிடும்.
மாதுளம்பழம்:
1 ஸ்பூன் மாதுளம்பழம் சாற்றில் 2 ஸ்பூன் கொள்ளு சாறு சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சனை தீரும்.
நெல்லிக்காய்பொடி:
நெல்லிப்பொடியை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் விரைவில் சிறுநீரக கல் கரைந்து வெளியேறும்.
சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன..
நீர் ஆகாரம்:
கொத்துமல்லி சாறு, தர்பூசணி சாறு, கரும்புச்சாறு மற்றும் மோர் இளநீர், பூசணிக்காய் சூப்போன்றவற்றை எடுத்து கொள்வதன் மூலம் சிறுநீரக கல் கரையும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |