சிலேட் குச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் | Slate Pencil Eating Side Effects
சிலேட் குச்சி என்றவுடன் சில நபர்களுக்கு உமிழ் நீர் சுரக்கும். ஒரு முறை சிலேட் குச்சியை சாப்பிட்டு விட்டால் அதன் ருசி ஒட்டி கொள்ளும். மறுபடியும் மறுபடியும் அதை சாப்பிட வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டுகிறது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சாம்பல் மற்றும் சிலேட் குச்சியே பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். அதனால் இந்த பதிவில் சிலேட் குச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Slate Pencil Eating Side Effects in Tamil:
ஊட்டச்சத்து குறைபாடு:
கர்ப்ப காலத்தில் சிலேட் குச்சி சாப்பிடுவதுகருவில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் யார் சாப்பிட்டாலும் அவர்களில் ஊட்டச்சத்து குறைபாடை ஏற்படுத்தி உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள்..!
இரும்பு சத்து குறைபாடு:
சிலேட் குச்சி சாப்பிட வேண்டும் என்ற உணர்வே உடலில் இரும்பு சத்து குறைபாடு தான். அதனில் நீங்கள் மேலும் சிலேட் குச்சியை சாப்பிட்டால் இரும்பு சத்து குறைபாடு மோசமடையும்.
இரத்த சோகை:
சிலேட் குச்சி சாப்பிடுவதால் உடல் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சிலேட் குச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வயிற்று வலி மற்றும் வாந்தி:
கெமிக்கல் நிறைந்த சிலேட் குச்சியை சாப்பிடும் போது வயிற்று பகுதியில் சென்று குடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வாய்ப்புண்:
சிலேட் குச்சியை தண்ணீரில் கரைத்தாலும் கரையாது. இதனை நீங்கள் சாப்பிடும் போது வாய், நாக்கு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தும். புளிப்பு, காரம் போன்றவற்றை சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
பசியின்மை:
சிலேட் குச்சி சாப்பிட்டால் பசி உணர்வே இருக்காது. மேலும் செரிமான பிரச்சனை, மலசிக்கல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். சிறுநீரக பிரச்சனை மற்றும் கல் உருவாகலாம்.
எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |