சொடக்கு தக்காளியில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

Advertisement

Sodakku Thakkali Benefits in Tamil

சொடக்கு தக்காளி என்பது, சாலையோரங்களில் அதிகம் வளரக்கூடிய தக்காளி செடி ஆகும். இந்த செடியில் உள்ள தக்காளியின் மேற்புற தோலை உடைத்தால் சொடக்கு சத்தம் கேட்கும் என்பதால் இதனை சொடக்கு தக்காளி செடி என்று கூறுவார்கள். சொடக்கு தக்காளியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. சொடக்கு தக்காளியின் பழம் மற்றும் இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. அவற்றை பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சொடக்கு தக்காளி ஆனது, தக்காளியை போலவே சிறிய வடிவில் சிகப்பு நிறத்தில் இருக்கும். இந்த சொடக்கு தக்காளியில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் சொடக்கு தக்காளியின் நன்மைகளை விவரித்துள்ளோம். ஓகே வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சொடக்கு தக்காளி நன்மைகள்:

 சொடக்கு தக்காளி நன்மைகள்

சத்துக்கள்:

சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், தயாமின், ரிபோப்ளோவின், நியாசின், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்புசத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இரத்தசோகை நீங்க:

சொடக்கு தக்காளியில் அதிக அளவில் இரும்புசத்து உள்ளதால், இரத்தசோகை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக சொடக்கு தக்காளி இருக்கிறது. எனவே, இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சொடக்கு தக்காளியை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் அதிகபடியான இரத்தம் உடலில் உற்பத்தியாவதோடு இரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது.

எலும்புகள் வலுப்பெற:

 sodakku thakkali uses in tamil

சொடக்கு தக்காளியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. ஆகையால் சொடக்கு தக்காளியை உணவில் எடுத்துவருவதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும்.

பாலக் கீரை நன்மைகள்

செரிமான பிரச்சனை நீங்க:

சொடக்கு தக்காளியில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், மலசிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.

கெட்ட கொழுப்பு குறைய:

சொடக்கு தக்காளியில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்கும் தன்மை உள்ளது. ஆகையால், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சொடக்கு தக்காளி சிறந்த மருந்தாகும். மேலும், இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் போக்குகிறது.

மூளை ஆரோக்கியம் பெற:

உணவில் சொடக்கு தக்காளி எடுத்துக்கொள்வதன் மூலம் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும். இதனால் மூளையின் செயல்திறன் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.

கண்கள் ஆரோக்கியம் பெற:

 சொடக்கு தக்காளி நன்மைகள்

கண் சம்மந்தப்பட்ட கோளாறுகள் இருப்பவர்கள் சொடக்கு தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வர கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக, கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் அனைவர்க்கும் சொடக்கு தக்காளி சிறந்த மருந்து ஆகும்.

நரம்பு மண்டலம் வலுப்பெற:

நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின்கள் சொடக்கு தக்காளியில் உள்ளது. ஆகையால், நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து சொடக்கு தக்காளியை உணவில் சேர்த்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டில் சொடக்கு தக்காளி வளர்ப்பது எப்படி.?

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement