சுருள்பாசி சாப்பிடுவதால் உடலுக்கு நன்மையா தீமையா?

Advertisement

சுருள்பாசி நன்மைகள் மற்றும் தீமைகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுருள்பாசி சாப்பிடுவதால் உடலிற்கு என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும். அதனை யார் சாப்பிடக்கூடாது என்பதை கொடுத்துள்ளோம். தீமைகள் சுருள்பாசியை பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் பச்சையம் அதிகமாக உள்ளது. அதனால் தான் அவை பச்சை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இது இந்தியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி.

இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான், மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை பொடி மற்றும் மாத்திரை வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. இவற்றில் உள்ள நன்மைகளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் இதில் உள்ள தீமைகள் பற்றி தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவில் சுருள்பாசி தீமைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சுருள்பாசி நன்மைகள் | Spirulina Benefits In Tamil:

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்:

சுருள்பசி சாப்பிடுவதால் உடலில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டால் கிருமிகள் உடலை தாக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்:

நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் சுருள்பாசியை சாப்பிட்டு வந்தால் 6 வாரத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

உடல் எடை குறையும்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுருள்பாசியை சாப்பிடு வந்தால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து, உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.

உடல் சுத்தமாகும்:

சுருள்பாசியை உட்கொண்டால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் சுத்தமாகும். மேலும் சுருள்பாசி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

மினெரல்ஸ் அதிகரிக்கும்:

சுருள்பாசியில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதை வைட்டமின் எ, பி, சி, டி மற்றும் ஈ போன்ற வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கிறது. சுருள்பாசியை உட்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியம் மேம்படும் மேலும் வைட்டமின்கள் அதிகரிக்கும்.

சரும பிரச்சனையை குணப்படுத்தும்:

சுருள்பாசியை முகத்தில் facial ஆக தடவினால் நம் சருமம் பொலிவடையும். சூரிய ஒளியோ, வெளிச்சமோ பட்டதும் உடனடியாக நம் சருமம் கருமையடையும். இதனை கட்டுப்படுத்தவும் சுருள்பாசி உதவுகிறது. சுருள்பாசி சருமம் மட்டும் இல்லாமல் முடியும் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

சுருள்பாசி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் | Spirulina Ttablets Side Effects in Tamil:

சுருள்பாசி தீமைகள்

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

சுருள்பாசியை சாப்பிடுவதால் வயிற்றுப்பிடிப்பு, குமட்டல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். முதல் முறையாக சுருள்பாசியை சாப்பிடுகிறவர்களுக்கு வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும்.

எடிமா பிரச்சனை:

எடிமா பிரச்சனை

ஸ்பைருலினாவில்காணப்படும் அயோடின் நல்லது என்றாலும், தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளை பாதிக்கலாம். ஹைபர்பாரைராய்டிசம் உள்ளவர்களில் இதன் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், அயோடினுடன் சேர்ந்து, இரத்தத்தில் குவிவதால், உங்கள் மூட்டுகளில் திரவம் தேக்கம் (எடிமா), கால்சியம், பாஸ்பேட் மற்றும் அயோடின் உறிஞ்சுதலில் ஏற்றத்தாழ்வு, மற்றும் திடீர் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உடல் சோர்வு, இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம்.

சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரக பிரச்சனை

சுருள்பாசியில் உள்ள புரதம் வளர்சிதை மாற்றம் செய்வதால் உடலில் அம்மோனியாவை உற்பத்தி செய்து யுரியவாக மாற்றுகிறது. இவை அதிக அளவு யூரியாவை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தில் அழுத்தத்தை கொடுக்கிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது.

நோய்களை அதிகப்படுத்துகிறது:

இதனை நீங்கள் சாப்பிடும் போது நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் ஏற்கனவே உங்களுக்கு நோய்கள் ஏதும் இருந்தால் அவற்றை அதிகப்படுத்தும்.

உடல் எடையில் ஏற்ற இரக்கம்:

ஸ்பைருலினாவில் (சுருள் பாசி) உள்ள அதிகமான தாதுக்களில் அயோடினும் ஒன்று. நம் உடலிற்கு அயோடின் இன்றியமையாத ஒன்று என்றாலும், அது அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளை பாதிக்கக்கூடும். முக்கியமாக ஹைப்பர்பாராதைராய்டிசம் உள்ளவர்களை இது மிகவும் பாதிக்கும்.

அதுமட்டுமில்லாமல், கால்சியம், பாஸ்பேட் மற்றும் அயோடின் உறிஞ்சுதலில் ஏற்றத்தாழ்வு, திடீர் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, சோம்பல் மற்றும் இருதய நோய்கள் போன்ற உபாதைகளையும் உண்டாக்கும்.

யாரெல்லாம் சுருள்பாசியை சாப்பிட கூடாது:

  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக நீங்கள் ஏதும் மாத்திரை எடுத்து கொண்டால் அவர்கள் சுருள்பாசியை எடுத்து கொள்ள கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் சுருள்பாசிசாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • குழந்தைகள் இவற்றை சாப்பிட கூடாது. ஏனென்றால் தோல் சம்மந்தப்பட்ட ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும்.

நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்..! 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 

 

Advertisement