Spleen in Tamil
மண்ணீரல் என்பதை வயிற்றின் இடது பகுதியில் உள்ளது. இதனுடைய வேலை இரத்த சிவப்பணுக்களை இரத்தத்திலிருந்து பிரித்து வெளியேற்றி இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்து கொள்வது இதன் முக்கிய செயல்களாக இருக்கிறது. மண்ணீரல் நமது உடலின் முக்கிய உறுப்பாக இருக்கிறது. அதனால் இதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
மண்ணீரலின் வேலை:
மண்ணீரல் மனித உடல் பகுதியில் அடிவயிற்றில் அமைந்துள்ளது. இவை மென்மையாக காணப்படும். பல வேலைகளை செய்கிறது. அதில் குறைபாடுள்ள இரத்த சிவப்பணுக்களை அழிப்பது, வெள்ளை அணுக்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
மண்ணீரல் வீக்கம் அறிகுறிகள்:
- இரத்த சோகை
- உடலின் நிறம் எப்பொழுதும் போல் இல்லாமல் வெளிர் நிறமாக இருப்பது
- அடிக்கடி உடலில் பிரச்சனை ஏற்படுவது
- வயிற்றின் மேல் இடது பகுதியில் வலி அல்லது இடது தோல் பட்டையில் வலி
- உடல் சோர்வு
- மூச்சு விடும் போது வலி ஏற்படுதல்
மண்ணீரல் நோயிற்கான இயற்கை வைத்தியம்..!
மண்ணீரல் வீக்கத்திற்கான காரணங்கள்:
கல்லீரல் ஈரல் நோய்
வைரஸ்கள் உடலைத் தாக்கி, மோனோநியூக்ளியோசிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
நீமன்-பிக் நோய் மற்றும் கௌச்சர் நோய் போன்ற சில வளர்சிதை மாற்றக் கோளாறுகள்.
எண்டோகார்டிடிஸ் அல்லது மேகப்புண்ணை ஏற்படுத்தும் பாக்டீரியா.
மண்ணீரலுக்கான இரத்த ஓட்டத்தை குறைக்கும் இரத்த உறைந்து போவதால் ஏற்படுகிறது.
மலேரியா போன்ற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்றுகள்.
மைலோப்ரோலிஃபெரேடிவ் நியோபிளாம்கள், லுகேமியா அல்லது ஏதேனும் லிம்போமாக்கள் போன்ற முன்கூட்டிய நிலைமைகள்
இரத்த சோகை
மேல் கூறப்பட்டுள்ள காரணங்களால் மண்ணீரல் வீக்கம் ஏற்படுகிறது.
மண்ணீரல் வீக்கத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்:
ஆப்பிள் ஜூஸ்:
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் நிணநீர் மண்டலம் சுத்தம் செய்து மண்ணீரலில் உள்ள வீக்கம் குறைந்து விடும். மேலும் இதனை உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சோம்பு:
3 அல்லது 4 லிட்டர் தண்ணீரில் சோம்பு 3 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் மண்ணீரலில் உள்ள வீக்கம் குறைந்து விடும்.
பீட்ரூட் ஜூஸ்:
ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸுடன், 1 தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடித்து வர வேண்டும்.
மண்ணீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |