தலை சுற்றல் மயக்கம் நீங்க
ஒரு மனிதனாக பிறந்து விட்டால் பல வகையான நோய்கள் வருவது வழக்கமாகி விட்டது. அதிலும் திடீரென தலை சுற்றுவது, கைகளில் நடுக்கம், கண்கள் இருண்டு காணப்படுதல் போன்றவை காரணமாக உள்ளது. தலை சுற்றுதலில் இருந்து விடுபடுவதற்கு மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கையான முறையில் தலை சுற்றுவதை தடுப்பதற்கு இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:
- இஞ்சி – 100 கிராம்
- பனைவெல்லம் – 150 கிராம்
- நெய் – 100 மி.லி
- ஏலக்காய் பொடி – 3 கிராம்
தலை சுற்றல் நீங்க பாட்டி வைத்தியம் | Thalai Sutral Patti Vaithiyam in Tamil
லேகியம் செய்முறை :
ஸ்டெப் : 1
முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். அதில் இஞ்சியை தோல் சீவி அதன் சதை பகுதி சிறியதாக நறுக்கி கொள்ளவும். பனைவெல்லம், நெய், ஏலக்காய் பொடி போன்ற பொருட்களை எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் நெய் ஊற்றி சூடான பின்பு, நறுக்கி வைத்த இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கி அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
ஸ்டெப் : 2
அடுத்ததாக பனைவெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். இதனை அடுப்பிலேயே 10 நிமிடம் அப்படியே வைத்தால் லேகியம் தயாராகிவிடும். சூடு ஆறியதும் லேகியத்தை ஒரு பவுலுக்கு மாற்றவும். இதனை இரவு வேலையில் நெல்லிக்காய் துண்டு அளவு எடுத்து சாப்பிட்ட பிறகு, சூடான தண்ணீரை குடிப்பதன் மூலம் தலை சுற்றல் மற்றும் பித்தத்தை குறைத்து விடும்.
தலை சுற்றல் காரணம்:
- குறைத்த இரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன்கள் மாற்றம் அடைவதால் தலை சுற்றல் ஏற்படும்.
- ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தலை சுற்றல் ஏற்படும்.
- காதுகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிரச்சனை இருந்தால் தலை சுற்றல் ஏற்படும்.
- ரத்த சோகை இருப்பவர்களுக்கு தலை சுற்றல் ஏற்படும்.
- மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி தலை சுற்றல் ஏற்படும்.
- தலை வலி, மிகை இரத்த கொழுப்பு, குறைத்த இரத்த அழுத்தம், ஊட்டசத்துக் குறைபாடு, சர்க்கரை நோய், நீரழிவு நோய், கர்ப்ப காலம், தைராய்டு, இதயத்துடிப்பு கோளாறுகள், பார்வை கோளாறு மற்றும் தூங்காமல் இருத்தல் போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு தலை சுற்றல் ஏற்படும்.
தலை சுற்றல் வந்தால் தவிர்க்க வேண்டியது:
- அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பை குறைத்து கொள்ள வேண்டும்.
- தலைக சுற்றல் ஏற்பட்டால் தரையிலேயே படுக்கவும், எழுந்து நடக்கக் கூடாது.
- மாடிப் படிகளில் ஏறுவதை தவிர்க்க வேண்டும்.
- ராட்டினத்தில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
- இரவு நேரத்தில் மின்விளக்குகளை ஏற்றி தூங்க வேண்டாம்.
- வாகனத்தில் செல்வதை குறைக்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |