வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா?

Advertisement

வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா? – Thengai Paal Benefits

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் தேங்காய் பால் அற்புதமான பலன்களை கொண்டது. இந்த விஷயத்தை நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அதனை பின் தொடர தவறிருப்போம். தேங்காய் பாலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக தேங்காய் பால் என்பது தாய் பாலிற்கு நிகரானது. உடனே பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம்.

அதாவது தாய் பாலில் கிடைக்கும் சத்துக்கள் அனைத்து இந்த தேங்காய் பாலிலும் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. சரி இன்றிய பதிவில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா என்பது குறித்த தகல்வளை பகிர்ந்துள்ளோம். தகவலை அறிய பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.

தேங்காயில் உள்ள சத்துக்கள்:

Thengai Paal Benefits

தேங்காயில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. குறிப்பாக மாங்கனீசு, பொட்டாசியம், புரதம், பாஸ்பரஸ், தாமிரம், செலினியம், தயமின், நியாசின், பாண்டோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், இரும்பு சத்து, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த பிளேட் குருப் உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதற்கு முன் இத தெரிஞ்சிக்கோங்க..!

வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் தேங்காய் மற்றும் தேங்காய் பாலை சாப்பிடலாமா என்பதை பற்றி பார்ப்போம். வெறும் வயிற்றில் தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிடலாம் இதில் நிறைய நன்மைகள் உள்ளது வாய்ப்புண் வயிற்றுப்புண் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் சரியாகிவிடும்.

இது போக நீங்கள் காலை இயற்கை உணவுகளுடன் தேங்காயை சாப்பிடலாம். அதாவது அரைமூடி தேங்காயுடன் இரண்டு செவ்வாழை பழத்தை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

மற்றபடி நீங்கள் உணவுகளுடன் தேங்காயை எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சனையை  ஏற்படுத்தும்.

தேங்காய் பால் இரவில் சாப்பிடலாமா?

தேங்காய் மற்று.ம் தேங்காய் பால் உடலுக்கு நல்லது என்று தெரியும் ஆனால் இரவு தேங்காய் மற்றும் தேங்காய் பாலை சாப்பிடலாமா என்று நமக்கு தெரியாது அதைப்பற்றி பார்ப்போம். தேங்காய் மற்றும் தேங்காய் பால் இரவு நாம் தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது.இரவு தூங்கும் பொழுது தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் எதுவும் வராது.

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement