துளசி இலை பயன்கள்
இன்றைய காலத்தில் துளசி செடி இல்லாத வீடுகளே இல்லை. அனைவரும் வீட்டிலையும் துளசி செடியை வைத்து வழிபடுகின்றனர். துளசி செடி சளிக்கு நல்லது என்று தெரியும். வேறு ஏதும் நன்மைகள் பற்றித்தெரியுமா உங்களுக்கு. துளசி செடியில் பல நன்மைகள் உள்ளது. அவற்றை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
100 கிராம் துளசியில் உள்ள சத்துக்கள்:
- கலோரிகள- 22
- மொத்த கொழுப்புகள்- 0.6 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்- 2.7 கிராம்
- நார்ச்சத்து- 2.7 கிராம்
- சர்க்கரைகள்- 0.3 கிராம்
- புரதம்- 3.2 கிராம்
- சோடியம்- 4 மி.கி
- பொட்டாசியம்- 295 மி.கி
நோய் எதிர்ப்பு சக்தி:
துளசியில் வைட்டமின் மற்றும் ஜின்க் சத்து உள்ளது. மேலும் இவற்றில் ஆன்டி பாக்ட்ரியல், ஆன்டி வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இதனால் நம் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுக்காக்கிறது.
காய்ச்சல் பிரச்சனை:
துளசியில் ஆன்டி பாக்ட்ரியல் மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகள் உள்ளது. இவை உடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்கு துளசியின் சாற்றுடன், கருப்பு மிளகாய் நுனுக்கி சேர்த்து கொள்ளவும். இதனை காய்ச்சல் பிரச்சனைக்கு எடுத்து கொண்டால் உடலின் வெப்பநிலையை குறைக்க செய்யும்.
கிருஷ்ண துளசிக்கும் ராமர் துளசிக்கும் என்ன வித்தியாசம்..!
சளி மற்றும் இருமல்:
துளசியில் உள்ள கேம்பின், சினியோஸ் போன்ற சத்துக்கள் மேஜில் உள்ள சளியை குறைக்க செய்கிறது. இதற்கு துளசி சாற்றுடன், தேன், மற்றும் இஞ்சி சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தம்:
துளசியில் Ocimumosides A மற்றும் B என்ற சேர்மங்கள் உள்ளது. இந்த கலவையானது மன அழுத்தத்தை குறைத்து மூளை பகுதியில் உள்ள செரோடோனின் மற்றும் டோபமைனை சமநிலைப்படுத்துகிறது. இவற்றில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது.
புற்றுநோய் பிரச்சனை:
துளசியில் உள்ள பைட்டோ கெமிக்கல் ஆக்சிஜினேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இவை தோல், கல்லீரல், நுரையீரல், வாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாத்துக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
துளசியில் உள்ள ஆக்சிஜினேற்ற பண்புகள் இரத்த கொழுப்பின் அளவை சமமாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சர்க்கரை நோய் பிரச்சனை:
துளசி இலைகளின் சாற்றை குடித்து வருவதால் நீரிழவு 2 நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்கிறது.
சிறுநீரக கற்கள்:
துளசி உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றுகிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கிறது. துளசி இலையை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகமால் பாதுகாக்கிறது.
மேலும் செரிமான பிரச்சனை, வாய்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |